Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு இசக்கியம்மா திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு இசக்கியம்மா திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: இசக்கியம்மா
  ஊர்: கள்ளிக்குப்பம்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடி மாதம், சித்திரை மாதம், நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  தமிழ்த்தெய்வமான முருகன், உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற குழந்தை இலக்கியங்களை அளித்த தமிழ்மூதாட்டி அவ்வையார் ஆகியோருக்கு இங்கு சந்நிதிகள் இருப்பது சிறப்பம்சம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு இசக்கியம்மா திருக்கோயில் கள்ளிக்குப்பம், அம்பத்தூர், சென்னை.  
   
போன்:
   
  +91 98407 36575. 
    
 பொது தகவல்:
     
  வெற்றி விநாயகர், துர்க்கை,  மகாவிஷ்ணு, முருகன், தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

அரவணைக்கும் அம்பிகை: உக்ரதெய்வமான இசக்கியம்மன் இங்கு சாந்த கோலத்தில் அமைதியாக காட்சியளிக்கிறாள்.  இடக்கையில் குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் இருப்பது அவளின் கருணை, வீரத்தை வெளிப்படுத்துகிறது. குழந்தையை கையால் அரவணைத்து காப்பதுபோல, தன்னை நாடிவரும் அன்பர்களை அரவணைத்து அருள்புரிகிறாள். நீதிதெய்வமாக இருந்து தர்மத்தை நிலைநாட்டுவதன் அடையாளமாக தலையில் நெருப்புக்கிரீடம் தாங்கியிருக்கிறாள். கன்னியாகுமரி முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் மாதிரியிலும், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் உருவஅமைப்பிலும் இக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தை வரம் தருபவளாகவும், குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காப்பவளாகவும் இங்கு வீற்றிருக்கிறாள்.

ஆடித்திருவிழா: இங்கு தமிழ்மந்திரம் சொல்லி வழிபாடு நடத்தப்படுகிறது. செவ்வாய், வெள்ளியன்று மாலை 6மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். குழந்தைகள், பெண்கள் அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். ஆடியில் மூன்றுநாட்கள் திருவிழா உண்டு.

 
     
  தல வரலாறு:
     
  தமிழர்களின் மரபாக விளங்குவது தாய்த்தெய்வ வழிபாடு. பழங்குடிமக்கள் வணங்கிய பழையோள், கொற்றவை, காளி போன்ற பெண்தெய்வங்களின் மறுவடிவமே இசக்கியம்மனாக விளங்குகிறது. அன்னை பார்வதி உலகை இயக்குபவளாக இருப்பவள். அதனால், அவளுக்கு இயக்கி என்று பெயர். அப்பெயரே இசக்கி என மருவி வழங்குவதாக கூறுவர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இசக்கியம்மன் வழிபாடு அதிகம். சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஓம்சக்திநகரில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் ஓம்சக்தி இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தமிழ்த்தெய்வமான முருகன், உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவர், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற குழந்தை இலக்கியங்களை அளித்த தமிழ்மூதாட்டி அவ்வையார் ஆகியோருக்கு இங்கு சந்நிதிகள் இருப்பது சிறப்பம்சம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar