Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வெற்றி விநாயகர்
  ஊர்: திருப்பரங்குன்றம்
  மாவட்டம்: மதுரை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தினமும் இரு கால பூஜைகள் நடக்கின்றன. சங்கடஹர சதுர்த்தியன்று சிறப்பு பூஜைகளும், மார்கழி முழுவதும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நடராஜருக்கு ஆனி, உத்திரம், வேலாயுதத்திற்கு கந்த சஷ்டி திருவிழா, துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளியில் எலுமிச்சம் பழத்தில் பக்தர்கள் விளக்கேற்றுகின்றனர். வெயிலுக்கு உகந்த அம்மனுக்கு ஊர்மக்கள் சார்பில் பங்குனி முதல் வெள்ளியில் கூழ் காய்ச்சும் விழா, 2ம் வெள்ளியன்று பொங்கல் விழா, 3ம் வெள்ளியன்று அன்னதானம் நடக்கிறது. நவராத்திரியில் அம்மனுக்கு 10 நாட்களும் கொலு அலங்காரம் நடக்கும். துர்க்காஷ்டியன்று சண்டி ஹோமம், விஜயதசமியன்று ஸ்ரீவித்யா ஹோமம் சிறப்பாக நடந்து வருகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு இரட்டை மருத மரங்கள் இருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில் திருப்பரங்குன்றம், மதுரை.  
   
போன்:
   
  +91 94425 84313 
    
 பொது தகவல்:
     
  ராஜராஜேஸ்வரி அம்மன் விமானத்துடன் கூடிய தனிசன்னதியில் எழுந்தருளியுள்ளார். அம்மன் வலது காலை மடக்கி, இடது காலை தரையில் ஊன்றி அமர்ந்த கோலத்தில் கரங்களில் அங்குசம், கரும்பு, மலர் சென்டுடன் காட்சியளிக்கிறார். கோயில் வளாகத்தில் இரட்டை மருத மரங்கள் உள்ளன.
 
     
 
பிரார்த்தனை
    
  விநாயகரை வேண்டுவோருக்கு தேர்வு, தேர்தல், வேலை வாய்ப்பு, செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறிய பின்பு, 11 தேங்காய்களுடன் கூடிய மாலை சாத்துப்படி செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  வெற்றி விநாயகர் கோயில். மூலஸ்தானத்தில் விநாயகர் நாகர்களுடன் எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளுகிறார். கல்வியில் சிறப்படைய ஹயத்கிரீவருக்கு மாணவர்கள் விளக்கேற்றுகின்றனர். தேய்பிறை அஷ்டமியின்று கால பைரவருக்கு வடைமாலை சாத்துப்படியாகி பூஜைகள் நடக்கிறது. தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை, சிவபெருமானுக்கு பிரதோஷ வழிபாடு, சுப்பிரமணியருக்கு வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
 
     
  தல வரலாறு:
     
  1964முதல் பீடத்தில் ஊரணி கோயிலாக இருந்த வெற்றி விநாயகருக்கு 1984ல் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த போது, என்ன பெயர் வைப்பது என ஆலோசிக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற விவசாயிகள் இருவர் வெற்றி, வெற்றி என பேசிச் சென்றனர். அன்றிலிருந்து சுவாமி வெற்றி விநாயகரானார். 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு இரட்டை மருத மரங்கள் இருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar