Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சோமநாதீஸ்வரர்
  அம்மன்/தாயார்: அமுதாம்பிகை
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்
  ஊர்: கொளத்தூர்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  பாடல் : குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி

சேவார் பெருமான் றிருக்குளத்தூர்
சேரப் பெற்றேன் றிருப்புகழை
நாவால் வாழ்த்தக் கைக்குவிக்க
மனத்தால் நினைக்க நறுந்தேனார்
பூவால் நீரால் அனுதினமும்
போற்றப் பெற்றே னாங்கவனும்
ஆவா வெனவந் தாண்டருளப்
பெற்றேன் பிறவி யற்றேனே.

பாடியவர் : மாதவ சிவஞான முனிவர்
 
     
 திருவிழா:
     
  சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசை  
     
 தல சிறப்பு:
     
  இக்கோயிலில் நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு இறைவன் சோமநாதசுவாமி காட்சி அளித்தது தனிச்சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில், கொளத்தூர், சென்னை. 600 099  
   
    
 பொது தகவல்:
     
  இக்கோயிலில் பிராகாரத்தைச் சுற்றிலும் மூலவர் விமானம், விநாயகர், முருகப்பெருமான், அம்மன் சன்னதியும், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார பிரார்த்தனைச் செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு புது வஸ்திரம் சாற்றியும், நெய் விளக்கேற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலில் நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு இறைவன் சோமநாதசுவாமி காட்சி அளித்ததும், அகத்திய மாமுனிவரால் பூஜிக்கப்பட்டதும் மாதவ சிவஞான முனிவரால் பாடற் பெற்றத் திருத்தலம். சோமேசர் முதுமொழி வெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், குளத்தூர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகியவை மாதவ சிவஞான முனிவர் கொளத்தூர் சோமநாதசுவாமி அமுதாம்பிகை நோக்கி பாடியவை ஆகும்.  
     
  தல வரலாறு:
     
  16ம் நூற்றாண்டில் வாழ்ந்த தவத்திரு மாதவ சிவஞான முனிவரால் திருகுளந்தை என்று போற்றப்பட்ட திருக்குளத்தூர் ஊர் காலப்போக்கில் மறுவி கொளத்தூர் என்று அழைக்கப்பட்டது.மாதவ சிவஞானமுனிவர் இத்தல சிவபெருமானை குறித்து பலபாடல் பாடியுள்ளார். இங்கு அமைந்துள்ள சிவபெருமானையும் அம்பிகையையும் சந்திரன் தனது அமுத கிரணங்களால் பூஜை செய்து வழிபட்டு உள்ளார். ஆதலால் சிவபெருமானுக்கு சோமநாதீஸ்வரர் என்றும் அம்பிகைக்கு அமுதாம்பிகை என்றும் திருநாமம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அகஸ்திய மாமுனிவர் வில்வனன், வாதாபி என்று அசுர சகோதரர்களை கொன்ற பாவத்தை போக்கி கொள்ள இத்தலத்தில் உள்ள சிவபெருமானை வழிப்பட்டு உள்ளார்.  இக்கோயிலில் 6.2.2014 அன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு இறைவன் சோமநாதசுவாமி காட்சி அளித்தது தனிச்சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar