Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள்
  தீர்த்தம்: துளசி தீர்த்தம்
  ஊர்: திருப்புல்லாணி
  மாவட்டம்: ராமநாதபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வாரத்தின் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கோயிலில் கூட்டம் இருக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  சன்னிதிக்கு வெளியே 80 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெண்பளிங்கு சிலையில் மகாவிஷ்ணுவின் வலதுபுற சக்கரத்திற்கு பதிலாக சங்கும் இடமாறி உள்ளது. சிலையை சுற்றிலும் பார்டர் போல் பெருமாளின் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு. தாயார் சன்னதி இல்லாமல் பெருமாள் மட்டும் (அபய ஹஸ்தத்து) காட்சியளிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி, ராமநாதபுரம்.  
   
போன்:
   
  +91 94865 62277. 
    
 பொது தகவல்:
     
  ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் 300 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம்  தொடங்கி பூர்வாங்க பணிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதனை ரெகுநாதபட்டர் என்பவர் ஒருகால பூஜை செய்து பராமரித்து வருகிறார்.  
     
 
பிரார்த்தனை
    
  இங்கு முக்கிய பிரார்த்தனையாக காய்ச்சல், தலைவலி குணமாவதால் ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றன. 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  தாயார் சன்னதி இல்லாமல் பெருமாள் மட்டும் (அபய ஹஸ்தத்து) காட்சியளிக்கிறார். ராமர் இங்கு வந்த போது தமிழ்முனிவர் அகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் உச்சரித்து வழங்கப்படும் துளசி தீர்த்தம், கடுமையான காய்ச்சல், தலைவலியினை குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  ராமநாதபுரம் மாவட்டத்தில் பல வைணவத் திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுள் மக்களால் அதிகம் அறியப்படாத பழமையான கோயிலான சேதுக்கரை சின்னக்கோயில் என்றழைக்கப்படும் ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் வெளியே தெரியப்படாமல் மரங்களாலும், புதர்களாலும் சிறைப்பிடிக்கப்பட்டு மூலஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்தமண்டபம், தாங்கி நிற்கும் சிற்பத்தூண்கள் பராமரிப்பின்றி கடும் மழை, வெயில், இயற்கை சீற்றங்கள் இவற்றில் இருந்து தெய்வாதீனமாக நிற்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது. ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள திருப்புல்லாணியில் இருந்து சேதுக்கரை செல்லும் வழியில் 3வது கி.மீட்டரில் பெரியதொரு ஆலமரத்தின் எதிரே கருவேல மரங்களால் மறைக்கப்பட்ட நிலையில் அவ்வழியே கடந்து செல்வோருக்கு புலப்படாத நிலையில் உள்ளது சின்னக்கோயில் என அழைக்கப்படும் ஏகாந்த ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில். சேது ஹிமாச்சலா என்று வேதங்களில் இந்தியாவின் கடைசி தெற்குப்பகுதியாக சேதுக்கரை கூறப்படுகிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில் தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சன்னிதிக்கு வெளியே 80 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெண்பளிங்கு சிலையில் மகாவிஷ்ணுவின் வலதுபுற சக்கரத்திற்கு பதிலாக சங்கும் இடமாறி உள்ளது. சிலையை சுற்றிலும் பார்டர் போல் பெருமாளின் பத்து அவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பு. தாயார் சன்னதி இல்லாமல் பெருமாள் மட்டும் (அபய ஹஸ்தத்து) காட்சியளிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar