Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குபேரலிங்கேஸ்வரர்
  உற்சவர்: குபேரலிங்கேஸ்வரர்
  அம்மன்/தாயார்: சொர்ணாம்பிகை
  தல விருட்சம்: வில்வம், நாகலிங்கம்
  ஆகமம்/பூஜை : சைவம்
  ஊர்: திண்டுக்கல்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், மாத பவுர்ணமி, பிரதோஷம்  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் குபேரலிங்கேஸ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய மேற்கு பார்த்த சிவனை தரிசிப்பது ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலனை தரும் என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில், வி.ஐ.பி. நகர், ஆர். எம் காலனி, 7வது கிராஸ்ரோடு, திண்டுக்கல் 624001  
   
போன்:
   
  +91 94431-75569 
    
 பொது தகவல்:
     
   மேற்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. மூன்று நிலை மூன்று கலசத்துடன் மேற்கு பார்த்து ராஜ கோபுரம் அமைந்துள்ளது.  வள்ளி தெய்வானையுடன் முருகன், துர்க்கை, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கொடிமரம் இங்குள்ளது. பதிணென் சித்தர்கள் உருவம் கோயிலின் உப்புறம் வரையப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  வேலை வாய்ப்பு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும், சகல சவுபாக்கியங்கள்  பெறவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயில் கோபுர சிறப்பு. சிவதிசையில் உள்ளது சிவன், ராமருக்கு காட்சி கொடுத்த சிற்பம் உள்ளது. ஈஸ்வர திசையில் உள்ளபடி, சனகாதிபதி முனிவர்கள் நால்வருக்கு பிரம்மத்தை போதித்த சிவன் மயூரி தாண்டவர் (சிவன், சக்தி) அதிகார நந்தி மத்தளம் அடிக்கும் காட்சி இங்கு காணலாம்.  
     
  தல வரலாறு:
     
  எட்டு ஆண்டுகளாக திண்டுக்கல் ஆர். எம். காலனி பக்தர்கள் வழிபடும் கோயில்களுள் ஒன்று. இங்குள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் முன், திண்டுக்கல்லில் வெள்ளம் ஒன்று வந்து வெள்ள நீரில் 48 மணிநேரம் சுவாமி நீரில் இருந்தார். இக்கோயிலில் மவுனத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். இறைவனிடம் மன தூய்மையுடன் தங்களது குறைகளை பக்தர்கள்கூறி சிறந்த பலனடைந்ததாக,கூறுகின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் குபேரலிங்கேஸ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய மேற்கு பார்த்த சிவனை தரிசிப்பது ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலனை தரும் என்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar