Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு இடும்பன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு இடும்பன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: இடும்பன்
  அம்மன்/தாயார்: இடும்பி
  ஊர்: பழநி
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி உத்திரம், தைபூசம், திருக்கார்த்திகை  
     
 தல சிறப்பு:
     
  இடும்பனுக்குரிய பெரிய தனி கோயில் இது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி- 624 601 திண்டுக்கல் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4545-242 236. 
    
 பொது தகவல்:
     
  பழநி மலைக்கு இடதுபக்கம் இந்த மலை அமைந்துள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
 

பழநி செல்பவர்கள் இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும். அப்படியானால் தான் முருகனை வழிபட்ட முழுபலனும் கிடைக்கும். குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
 

கந்தசஷ்டி கவசம் படிப்பவர்கள் "இடும்பாயுதனே இடும்பா போற்றி' என்ற வரியை வாசிப்பார்கள். இதிலிருந்தே பழநிமலை தோன்றக் காரணமான இடும்பனின் முக்கியத்துவத்தை அறியலாம். இங்கு செல்லும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இடும்பன் மலையை எட்டிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், பழநியாண்டவரின் திருவருளால் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டு 2000ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.


பழநியின் வரலாற்றில் இடும்பனுக்கு தனிச் சிறப்பு உண்டு. ""என்னை வணங்கும் முன் உன்னை வணங்கியே என் மலை ஏற வேண்டும். உன்னை வணங்கு வோர்க்கு என்னை வணங்கிய பலன் கிடைக்கும்,'' என்று முருகனே அருள் பாலித்திருக்கிறான். இனி பழநி செல்பவர்கள் அவசியம் இடும்பன் மலைக்கும் சென்று வாருங்கள்.


2000ம் ஆண்டில் பழநிமலை எதிரிலுள்ள மலையில் இடும்பனுக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டது. 13 அடி உயரத்தில் இடும்பன் காவடி தூக்கி வருவது போன்ற பிரமாண்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. விநாயகர், முருகன் சிலைகளும் உள்ளன. 540 படிகள் ஏறி இடும்பனைத் தரிசிக்க வேண்டும். பழநி செல்பவர்கள் இடும்பனையும் அவசியம் வழிபட வேண்டும். அப்படியானால் தான் முருகனை வழிபட்ட முழுபலனும் கிடைக்கும்.


 
     
  தல வரலாறு:
     
 

முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரி யனாகத் திகழ்ந்தவன்இடும்பாசுரன்.முருகனால் இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு, இடும்பன் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான். சிறந்த சிவபக்தனாக விளங்கிய இடும்பனுக்கு அவனது மனைவி இடும்பி உற்றதுணையாக விளங்கினாள். இவர்கள் தங்கியிருந்த இடம் "இடும்ப  வனம்' எனப்பட்டது. (தற்போது இந்தஇடம் திருத்துறைப் பூண்டியில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் உள்ளது) இந்நிலையில், அகத்தியர் தனது  பூஜைக்காக சிவதி சொரூபங்களாக விளங்கும் சிவமலை மற்றும் திமலை ஆகியவற்றை முருகப் பெருமானிடம்  கேட்டார். முருகப்பெருமானும் அவற் றைத் தந்தருளினார். அவற்றை கேதாரத்தில் உள்ள பூர்ச்சவனம் என்னுமிடத்தில் வைத்து வணங்கி வந்தார் அகத்தியர்.இந்நிலையில் மலைகளை அங்கேயே வைத்து விட்டு பொதிகை செல்லும் நிலை ஏற்பட்டது. இடும்பன் வன சஞ்சாரம் செய்த போது, குற்றால மலையில் தங்கியிருந்த  அகத்தியரைக் கண்டான். முருகப்பெருமானின் கருணையைப் பெற விரும்புவதாகக் கூறினான். அசுரகுருவாயினும் அவனது உயர்ந்த  எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர், கேதாரத்திலு ள்ள சிவமலை, திமலையை "சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தையும், பாவம் போக்கும் "அரோகரா' என்றும் முழங்கியபடியே பொதிகைக்கு கொண்டு வந்தால் முருகனின் தரிசனம்கிடைக்குமென்றார்.


இடும்பனும் இடும்பியும் அங்கு சென்று அம்மலையைத் தூக்க சிவனை வேண்டி தவமிருந்தனர். அப்போது பிரமதண்டம் (கம்பு) ஒன்று தோன்றியது. அஷ்டதிக்கு நாகங்களும் அங்கே வந்தன. அவற்றைபிரமதண்டத்தில் உறிபோல் கட்டி, மலைகளை அதில் வைத்து காவடியாகச் சுமந்தபடி பொதிகை வரும் வழியில்  திருவாவினன்குடி என்ற இடத்தில் பாரம் அதிகமாகவே அங்கே இறக்கி வைத்தான். இளைப்பாறிய பிறகு மீண்டும் தூக்கவே அவனால் முடியவில்லை. சிவமலையின் மீது ஒரு சிறுவன் ஏறி நின்றுவிளையாடிக் கொண்டி ருந்தான். அவனது அழகைப் பார்த்ததுமே இடும்பன் அவனை ஒரு தெய்வப்பிறவி என்று நினைத்தான். மலையில் இருந்து இறங்கிவிடும்படி அவனைச் சொன்னான். அவன் மறுத்த துடன், ""இது நான் தங்கப்போகும் மலை''என்று வாதிட்டான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தச்சிறுவன் தன் கையில் இருந்த தண்டத்தால் இடும்பனை லேசாகத் தட்ட, அந்த அடியைத் தாங்க முடியாமல் இடும்பன் கீழே விழுந்து இறந்தான். இடும்பி கதறினாள்.அசுரர்களுக்கே வில்வித்தை கற்றுக்கொடுத்த தன் கணவனைக் கொல்லும் தகுதி, அசுரர்களை வென்ற அந்த முருகனைத் தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது என உறுதியாக நம்பிய இடும்பி, சிறுவனின் காலில் விழுந்தாள். அச்சிறுவன் மயில் மேல் முருகனாக காட்சி தந்து இடும்பனை எழுப்பி,""இடும்பா! இம்மலையின் இடையில் நீ நிற்க வேண்டும். பக்தர்கள் உன்போல் எனக்குரிய வழிபாட்டு பொருட்களை காவடியாக கொண்டு வர வேண்டும். உன்னை முதலில் வழிபட்டே என்னை வழிபட வேண்டும். உன்னை வணங்கியவர்கள் என்னை வணங்கிய பயனைப் பெறுவார்கள்,'' என்றார்.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இடும்பனுக்குரிய பெரிய தனி கோயில் இது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar