Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு 108 நன்மை தரும் விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு 108 நன்மை தரும் விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: 108 நன்மை தரும் விநாயகர்
  உற்சவர்: பஞ்சலோக விநாயகர்
  அம்மன்/தாயார்: உண்ணாமுலையம்மன்
  தீர்த்தம்: கோபால சமுத்திரம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: திண்டுக்கல்
  ஊர்: கோபாலசமுத்திரக்கரை
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், மகாசங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, சிறப்பு பூஜை, சொர்ண ஆகர்ஷண பைரவர் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  சித்திரை முதல் தேதியில் சிவபெருமான் மீது சூரிய ஒளி படர்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு 108 நன்மை தரும் விநாயகர்(மகா சங்கடஹரசதுர்த்தி) திருக்கோயில், கோபாலசமுத்திரக்கரை, பழநிரோடு, திண்டுக்கல்-624001.  
   
போன்:
   
  +91 98421 31524 
    
 பொது தகவல்:
     
  திண்டுக்கல் கோபால சமுத்திரக் கரையில் அமைந்துள்ளது. 16 அடி உயர கஜமுக விநாயகர், ராஜகணபதி வீற்றிருக்கிறார். அடுத்து ஐயப்பனும், தட்சிணாமூர்த்தியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மூலவர் நன்மை தரும் விநாயகர் காட்சி தருகிறார். முன் மண்டபத்தில் 107 விநாயகர்கள் வீற்றிருந்தும், அவர்களுக்கு முன் அண்ணாமலை, உண்ணாமலை அம்மனும், சீனிவாசபெருமாள், சொர்ண ஆகர்ஷன பைரவர், மகாலட்சுமி, தேவி கருமாரியம்மன், ஆஞ்சநேயர், துர்க்கை, முருகன், மதுரைவீரன், சமயபுரம் மாரியம்மன், கருப்பணசாமி உள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  அண்ணாமலை, உண்ணாமலையம்மனுக்கு பிரதோஷத்தில் உற்சவமூர்த்திக்கு 2 மாலை அணிந்து சுற்றிவந்தால் வேண்டுதல் நிறைவேறுகிறது. இங்குள்ள ஆகர்ஷன பைரவரை வழிபடுபவருக்கு கடன் பிரச்னை தீர்வதால் பக்தர்கள் பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வெள்ளிதோறும், சங்கடஹர சதுர்த்தியன்று காலை 6.30-9 மணிவரை தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகர்வலம் வந்து விநாயகரை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலில் திருவுலா சீட்டு எடுப்பதன் மூலம் கோட்டை மாரியம்மனுக்கு தங்கவசம், ஆர்.வி.நகர் காளியம்மன்  சமயபுரம் மாரியம்மன் கோயில் போன்ற கோயில்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்திக்கு பின் இங்கு விநாயகர் சிலை காண்பதில்லை. திருஓலை சீட்டு பக்தர்கள் தங்களது கோரிக்கையை திருஓலை சீட்டு மூலம் இறைவனிடம் அனுமதி பெறுவது சிறப்புமிக்கதாக உள்ளது.
 
     
  தல வரலாறு:
     
  முந்தைய காலத்தில் தாத்திரி வனம் என்று அழைக்கப்பட்ட (நெல்லிமரம்) திண்டுக்கல் நகரில் நடுவில் அமைந்துள்ள மலைக்கோட்டைக்கு வடகிழக்கில் கோபால சமுத்திரம் உள்ளது. குளம் சுதந்திர போராட்ட தியாகி விருப்பாட்சி ஜமீன்தார் கோபால நாயக்கர் பெயரால் அமைக்கப்பட்டது. திண்டுக்கல் மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து வந்தது. இக்குளத்தில் 2 அடி உயரத்தில் இருந்த ஆதி விநாயகர் இன்று 108 விநாயகராக காட்சி தருகிறார். இக்கோயிலில் முன்பு திருவிழாவிற்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மின்சாரம் எடுக்கப்பட்டது. கோயிலிற்கு மின் இணைப்பு பெற யார் பெயரில் இணைப்பு பெறலாம் என்று பல பெயர்கள் திருவுலா சீட்டு எழுதி போட்டதில் நன்மை தரும் விநாயகர் என்ற பெயர் வந்தது. அதுமுதல் திருவுலா சீட்டு  முதல் எழுதியதோடு தேர்வு செய்யும் பதவியும் இங்குள்ளது. இன்று 108 விநாயகர் சிலைகள் இங்குள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்திரை முதல் தேதியில் சிவபெருமான் மீது சூரிய ஒளி படர்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar