Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராஜராஜேஸ்வரி
  அம்மன்/தாயார்: ராஜராஜேஸ்வரி அம்மன்
  தல விருட்சம்: வேம்பு, ஆலமரம்
  ஆகமம்/பூஜை : மூன்று கால பூஜைகள்
  ஊர்: கோயம்புத்தூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அன்னைக்கு சித்திரை மாத பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடைபெறுவதுடன் காலை திருக்கல்யாணமும் மதியம் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி மாத 5 வெள்ளிக்கிழமைகளிலும் பூஜை வழிபாடுகள், ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று விசேஷ பூஜை வழிபாடு, புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகள், பொங்கல், மாசி மாத மகம், பங்குனி உத்திரம் போன்ற அனைத்து நாட்களும் இங்கு திருவிழா நாட்களே. இந்த நாட்களில் அன்னைக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னைக்கு விதம் விதமாக அலங்கரித்து சிறப்பு பூஜை செய்வதுடன் அன்னை அப்போது வீதி உலா வருவதுண்டு. ஐப்பசி மாதம் விழாக்கால பூஜைகளும், கார்த்திகை மாதம் கார்த்திகை தீபவிளக்கு பூஜை வழிபாடுகள், மார்கழி மாதத்தின் முப்பது நாட்களும் அன்னைக்கு திருவிழா நாட்களே. தினசரி அன்னைக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். திருவாதிரை அன்று ஆருத்திரா தரிசனம் சிறப்புப் பூஜைகள் தைமாதம் பொங்கல் விழாக்கால பூஜைகள், மாசிமாதம் மகநட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள், பங்குனிமாதம் பங்குனி உத்திரத்தன்று விழாக்கால பூஜைகள், கோகுலாஷ்டமி அன்று பஞ்ச நாகர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுவதுண்டு. செவ்வாய்க்கிழமை தோறும் சப்த கன்னியர்களுக்கு ராகுகால பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. மாத பவுர்ணமி நாட்களில் திருவிளக்குப் பூஜை மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான விநாயகர் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு. அம்மனின் முகம் அக்னி திசையை நோக்கி திரும்பி இருப்பதும், இதனால் பக்தர்களின் வேண்டுதல் உடனே நிறைவேறுவதும் சிறப்பு. அபிராமி அந்தாதியில் வருவது போல், இத்தல ராஜராஜேஸ்வரி அங்குச பாசாங்குசமும், கரும்பும், ஐங்கணையும் ஏந்தி அருள்பாலிப்பது சிறப்பு. கொல்லுõர் மூகாம்பிகை செல்ல இயலாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் நடக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். இங்குள்ள புற்றின் கீழ் 15ம் நுõற்றாண்டில் வாழ்ந்த நாகயக்ஞ பவீத சுவாமிகளின் ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.(வெள்ளிக்கிழமையில் காலை 10.30 முதல் 12 வரை) 
   
முகவரி:
   
  அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில், குறிச்சி வீட்டு வசதி வாரியம், திட்டம்-2, கோயம்புத்தூர்-21.  
   
போன்:
   
  +91 98434 85412, 98425 37893, 94432 41380, 98659 22862 
    
 பொது தகவல்:
     
  ஏகதளவிமானத்துடன் கூடிய கோயில் கண்கவர் விதமாகப் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு 24.2.2000ம் ஆண்டில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அவர்களின் தலைமையில் திருக்குடமுழுக்குத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. கோயில் முகப்பைக் கடந்ததும் மகாமண்டபம் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் தென்திசையில் துர்க்கையும், மேல்திசையில் பிள்ளையார், கருப்பராயர் மற்றும் சப்த கன்னியர் திருமேனிகள் உள்ளன. அதையடுத்து ஆதிவிநாயகர், ஆதிசிவன், ஆதிசக்தி, காளிங்க நர்த்தனர், புற்று, சித்தர் ஜீவசமாதி, கன்னிமூலகணபதி, சக்தி பாலமுருகன், ஆகியோர் திருமேனிகளும், சூலமும் உள்ளன. தேவியின் தேவக்கோட்டத்தின் தென்புறம் கவுமாரியும், மேல்புறம் வைஷ்ணவியும், வடபுறம் பிராம்ஹியும் அருள்பாலிக்கின்றனர். தலவிருட்சங்களின் கீழே மேடையில் பஞ்ச நாகர் சிலைகள் உள்ளன.

1. ஒரு சமயம் இப்பகுதியில் ஐயப்ப பக்தர்கள் தங்கள் இஷ்ட தெய்வமாகிய ஐயப்பனுக்கு திருக்கோயில் கட்ட் தீர்மானித்தார்கள். அதற்காக அவர்கள் அருகில் உள்ள கேரள மாநிலம் சென்று, வேத மந்திரங்களை முறையாக பயின்ற ஒரு மலையாள பணிக்கரை அழைத்து வந்தனர். பணிக்கர் மந்திரங்களை ஜெபித்து வெற்றிலையில் மை தடவியப்பின், தன் இஷ்ட தெய்வமாகிய மலையாள பகவதியின் உத்தரவு கேட்க, கேரள பகவதித் தாய் அவரது ஞான திருஷ்டியில் தோன்றி, தெற்கு திசையில் சுயம்புருவாய், புற்றுவடிவமாய், நாக ஜோதியாய், துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் ஓம்சக்தி அருள்பெற்ற ராஜராஜேஸ்வரி அம்மன் ஏற்கனவே எழுந்தருளியுள்ளார் என்று கூறினார். ஐயப்பனுக்கு கோயிலைக் கட்ட விரும்பினால், ஓம் சக்தி அம்மன் உள்ள இடத்திற்கு சென்று அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து அம்மனின் சக்தி கலசம் வைத்து, கலசத்திற்குள் அம்மனை உயிர்பெறச் செய்து அந்தக் கலச நீரை ஐயப்பன் கோயில் கட்டும் இடத்தில் தெளித்து அம்மன் அருள் பெற்று ஐயப்பன் கோயில் திருப்பணியை தொடங்கலாம் என்று அருள் மொழிந்தார். அவ்வாறே ஐயப்பபக்தர்களும் ஓம்சக்தி அம்மனின் அருள் பெற்று ஐயப்பன் கோயில் திருப்பணிகளை சிறப்பாக செய்து முடித்தனர்.

2. திருப்பூரில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த அன்பரின் மகளுக்கு நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வந்தது. அன்பரும் தங்கள் குடும்பத்தார் அனைவரும் ஓம்சக்தி அம்மனை வழிபட்டு, பின்னர் தங்கள் மகனின் தடைபட்ட திருமணம் நடந்து முடிந்தது கண்டு மகிழ்ந்தனர்.

3. மற்றொரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, தேதி முடிவான பிறகு, அப்பெண்ணிற்கு உடல் முழுவதும் வெண்குஷ்டம் போல் தோன்றியது. அம்மனின் நாகப்புற்றுக்கு பாலூற்றி, அம்மனை 48 நாட்கள் வழிபட்ட பிறகு, அம்மணப்பெண்ணிற்கு நோய் நீங்கியது.

4. பிறவியிலிருந்தே கண்பார்வையற்று இருந்த தங்கள் மகனுக்கு அம்மன் திருவருளால், கண்பார்வை படிப்படியாக கிடைக்கப் பெற்றது கண்டு அவரது பெற்றோர் அம்மனை போற்றி வழிபட்டு வருகின்றனர்.

5. உடல் நலமற்று இருந்த தனது தாயார் மீண்டும் உடல்நலம் பெற அவரது மகள் ஓம்சக்தி அம்மனை வேண்டிக் கொண்டாள். அம்மனின் திருவருளால் அன்பரின் தாயார் உடல்நலம் பெற்றார்.

6. தண்ணீர் பற்றாக்குறையால் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட இப்பகுதிவாழ் மக்கள் அம்மன் தான் தங்கள் குறைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அம்மனின் பேரருளால் தடைகள் நீங்கி பழுதுபார்ப்பு வேலைகள் குறிச்சி பஞ்சாயத்தார் செலவில் நடந்தேறியது.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு முக்கிய பிரார்த்தனையாக கண் சம்பந்தமான நோய்களை தீர்க்கவல்லவள் என்பதால் பார்வைகோளாறுகளை சரிசெய்ய பிரார்த்திக்கின்றனர். அதுமட்டுமின்றி உடல்நலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்காகவும் பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனைகள் நிறைவேறியதும், அம்மனுக்கு காணிக்கையாக, அபிஷேகம் செய்தும், புதுவஸ்திரம் சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  வடக்குப் பிரகாரத்தில் பஞ்ச நாகலிங்க கிருஷ்ண உரு நான்கடி உயரதிருமேனியாக உள்ளது. வசுதேவர்-வாசுகிக்குப் பிறந்த கிருஷ்ணனை கம்சன் கையிலிருந்து தப்புவிப்பதற்காக, பெருமழை பிடித்த ஒரு நாளில் அவனை யசோதையிடம் கொண்டு சேர்க்க வசுதேவர் சென்றபோது அவர்ளை மழையிலிருந்து நாகம் குடைபிடித்துக் காத்ததே அந்த புராண சம்பவத்தை நினைவுறுத்துவதுபோல இச்சிலை அமைந்திருக்கிறது. சிவனே கிருஷ்ணன் என்ற ஒப்புமையையும் இச்சிலை விளக்குகிறது.

தினசரி காலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரை காலசந்தி பூஜை, மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை சாயரட்சை/இராக்கால பூஜை, பிரதி செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை இராகுகால பூஜைகளும், சப்தரிஷி கன்னிமார்களுக்கு சிறப்புப் பூஜைகள், பிரதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிமுதல் 12.00 மணி வரை அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், பிரதி மாதம் பவுர்ணமி அன்று மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை திருவிளக்குப் பூஜை, பிரதி மாதம் அனைத்து அம்மன் பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவரின் பிறந்த நட்சத்திரத்திற்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது.
 
     
  தல வரலாறு:
     
  ஓம்சக்தியினை அரவிடத்தவள், காமக்கோடத்து, அம்பிகை, மாதா, திருமந்திரச் செல்வி, தேவி, சாம்பவி, மலை மடந்தை, பறை, சிவை, கவுரி, பார்வதி, பவானி, சக்தி, நாரி, சூரி, முக்கண்ணி, மாலினி, எண்டோளி, சூலி, சண்டிகை, வீரி, மாதரி, கங்காளி, வேதாளி, மாதங்கி, தாரகற் செற்ற தையல், பைரவி, சாமுண்டி, ஆரணி, வல்லணங்கு, ஐயை, யாமளை, முக்கண்ணி, அலகை, கொடியார்த்தாள்,  துர்க்கை, யாளியூர்தி, மாயை, யோகினி, மதுமதி ராஜராஜேஸ்வரி என்ற திருநாமங்களோடு, இப்படி பல்வேறு திருத்தலங்களில் இருந்து, அருள்பாலித்து வருகிறாள். இவ்வாறு அன்னை ராஜராஜேஸ்வரி அமைதியே உருவாக இங்கு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். மேற்கு தொடர்ச்சி மலையின் இதமான தென்றல் தாலாட்டு பாட அன்னை புன்னகை தவழும் முகத்தோடு அருள்பாலிக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும்.

1970-ம் ஆண்டில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் குறிச்சி வீட்டு வசதிவாரியத்தின் குடியிருப்புப் பகுதியில் உள்ள தனியார் சிறு தொழிற் பேட்டைக்குச் சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. அத்தோட்டத்திற்கருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில், சுயம்புருவாக, ஒரு தெய்வீகப் புற்று தோன்றியது. அந்த புற்று அமைந்துள்ள இடத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சாலையைக் கடந்தால், மலையும் மலையை ஒட்டிய விவசாய நிலங்களும் அமைந்துள்ளன. அங்கிருந்து பொன்னிற கோதுமையொத்த நாகம் ஒன்று புறப்பட்டு, சாலையைக் கடந்து, சுயம்புருவாய் எழுந்த புற்றில் சிறிது நேரம் தங்கி, இளைப்பாறிச் சென்றது. நாள்தோறும் இதைக் கண்டு வந்த இப்பகுதி மக்கள் ஓம் சக்தி ராஜராஜேஸ்வரி தாய் தான் சுயம்புருவாய், நாகப்புற்று வடிவமாய் எழுந்தருளி உள்ளாள் என்றுணர்ந்து, புற்றுக்கு மஞ்சள், குங்குமம், பூக்கள் சாற்றி கற்பூரம் ஊதுபத்தி ஏற்றி வைத்து, பொங்கல் படையல் வைத்து பாம்பிற்கு பாலூற்றி வழிபடத் தொடங்கினர்.

பக்தர்கள் தங்கள் குறைகளைச் சொல்லி பல்வேறு வேண்டுதல்கள், நிறைவேற, ஓம்சக்தி அம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி, அன்னையின் அன்பிற்குப் பாத்திரமாயினர். 1980-ஆம் ஆண்டில் ஓம்சக்தி அம்மன் ராஜராஜேஸ்வரி அன்னையின் பெருமை எங்கும் பரவத் தொடங்கியது. ஆண்களும், பெண்களும், கூட்டுவழிபாடுகள் செய்யத்துவங்கினர். ஓம்சக்தியின் மறுஉருவமாகிய துர்க்கையம்மன், சிவலிங்கம், விநாயகர் ஆகியோரின் திருஉருவச்சிலைகளை பிரதிஷ்டை செய்து, சிறப்புப் பூஜைகள் செய்து, வழிபட்டனர். ஓம்சக்தி அன்னையின் அருள்பெற்று, தெய்வீகப் பாம்பாக உருவெடுத்து, அனைவரின் வேண்டுதல்களை தீர்த்து, சிறப்புப் பெற்ற அன்னையின் இருப்பிடமாகிய ஓம்சக்தி திருக்கோயிலுக்கு சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் 5.3.2000ம் ஆண்டு மாசி 22-ம் தேதி திருக்கோயிலுக்கு, விமான கோபுரம் தாங்கிய புதிய திருக்கோயில் அமைக்க பூமி பூஜை சிறப்பாக போடப்பட்டு திருப்பணி வேலைகள் இனிதே துவங்கின. அன்னையின் பேரருளாலும், சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரிலும் கோயில் திருப்பணிகள் சிறப்பாக உருவெடுத்தன. கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் அன்னை ராஜராஜேஸ்வரி அருள்பொங்கும் இன்முகத்துடன் புன்னகை பூக்க அமர்ந்திருக்கிறாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான விநாயகர் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு. அம்மனின் முகம் அக்னி திசையை நோக்கி திரும்பி இருப்பதும், இதனால் பக்தர்களின் வேண்டுதல் உடனே நிறைவேறுவதும் சிறப்பு. அபிராமி அந்தாதியில் வருவது போல், இத்தல ராஜராஜேஸ்வரி அங்குச பாசாங்குசமும், கரும்பும், ஐங்கணையும் ஏந்தி அருள்பாலிப்பது சிறப்பு. கொல்லுõர் மூகாம்பிகை செல்ல இயலாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் நடக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். இங்குள்ள புற்றின் கீழ் 15ம் நுõற்றாண்டில் வாழ்ந்த நாகயக்ஞ பவீத சுவாமிகளின் ஜீவ சமாதி இருப்பதாக கூறப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar