Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு புலியாண்ட அப்பச்சி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு புலியாண்ட அப்பச்சி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: புலியாண்டி பெருமாள்
  உற்சவர்: புலியாண்டி பெருமாள்
  அம்மன்/தாயார்: முத்து மாரியம்மன்
  தல விருட்சம்: புளியமரம்
  தீர்த்தம்: மடத்துகாடு தீர்த்தம்
  புராண பெயர்: சிங்க ஊத்து
  ஊர்: சுகுணாபுரம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதேசி, புரட்டாசி சனிக்கிழமைகள், மாவிளக்கு திருவிழா,காவடி ஆட்டம்.  
     
 தல சிறப்பு:
     
  எந்த கால்நடைகளுக்கு உடல் உபாதை பிரச்சனை ஏற்பட்டாலும்,ஒரு முறை வழிபட்டால் நிவர்த்தி ஆகும்,பூஜை செய்த பின் தீர்த்ததை கால்நடைகள் மீது தெளித்தால் சரியாகும்,காரியம் வெற்றியடைய கோவிலில் வேண்டினால் பல்லி –கௌலி வேண்டிய இடத்தில் வந்து உத்தரவு சத்தம் கொடுக்கும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை: 4மணி முதல் 8 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு புலியாண்டி அப்பச்சி கோவில் சுகுணாபுரம் கிழக்கு பாலக்காடு மெயின் ரோடு கோயம்புத்தூர் - 641008  
   
போன்:
   
  +91 94439 35556 
    
 பொது தகவல்:
     
  கோவில் மற்றும் புலியாண்டி அப்பச்சி கிழக்கு நோக்கி,தாயார் வடக்கு நோக்கி, காணியப்பன்,மசராயன் தெற்கு நோக்கி,காவல் தெய்வம் மேற்கு நோக்கி, விநாயகர், முருகன் கிழக்கு நோக்கி, அய்யாசாமி  மற்றும் வாகனம் கிழக்கு நோக்கி கோவிலும் அமைந்திருக்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமண தடை,நோய் நொடி,குழந்தை பாக்கியம், ஏவல்கள், தொழில் முடக்கம், கால்நடை அபிவிருத்தி. 
    
நேர்த்திக்கடன்:
    
  தங்களுடைய உருவங்களையே பொம்மைகளாக செய்து வைத்தல்,காவல் தெய்வத்திற்கு மட்டும் ஆடு,கோழி பலியிடுதல். 
    
 தலபெருமை:
     
  குனியமுத்தூர் கிராமத்தின் முதல் இந்து கோவில்,1829 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்து வரைபடத்தில் கோவில் உள்ளது. இப்பகுதி வாசிகள் அருகிலுள்ள வெள்ளிங்கிரி மலைக்கு பாதயாத்திரை செல்லும் போது அபிேஷகங்கள் செய்த பின்பு செல்வார்கள்.  
     
  தல வரலாறு:
     
  200 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவன் ஒருவன் மலை காட்டு பகுதியில் மாட்டு மேய்த்து கொண்டிருந்தான்,அக்காலத்தில் ஆயிர கணக்கில் ஆடு,மாடுகள் மோயும்,அப்பொழுது அவ்விடத்தில் சித்தர் ஒருவர் தியானிக்க மரத்தடியில் அமர்ந்து தியானிப்பர்,ஒருநாள்  மேய்ந்து கொண்டிருந்த மாட்டுக்கு நோய்வாய்பட அங்கிருந்த அமர்ந்திருந்த சித்தர் மாட்டிற்கு மூலிகைகளை கொடுத்து சரிசெய்து காப்பாற்றினார்,பின் அவ்விடத்திலேயே ஜீவசமாதியும் அடைந்தார், சித்தர் கூறியதாவது எந்தவொரு கால்நடைக்கு பாதிப்போ நோய்வாய் பட்டாலோ எனக்கு அபிேஷகம் பூஜை செய்து வழிபடு அனைத்தும் நிவர்த்தியாகும் என்று கூறினார்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: எந்த கால்நடைகளுக்கு உடல் உபாதை பிரச்சனை ஏற்பட்டாலும்,ஒரு முறை வழிபட்டால் நிவர்த்தி ஆகும், பூஜை செய்த பின் தீர்த்ததை கால்நடைகள் மீது தெளித்தால் சரியாகும்,காரியம் வெற்றியடைய கோவிலில் வேண்டினால் பல்லி –கௌலி வேண்டிய இடத்தில் வந்து உத்தரவு சத்தம் கொடுக்கும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar