Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு திம்மராயப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு திம்மராயப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: திம்மராயப் பெருமாள்
  ஊர்: கா. புங்கம்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இக்கோயிலில் ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாத முதல் நாள், ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரம் ஆகிய தினங்களில் சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி திருவோணநாளில் திருக்கல்யாண உற்சவமும், உட்பிரகாரத்தில் திருவீதி உலாவும், வைகுண்ட ஏகாதசியன்று சப்பரத்தில் பெருமாள் பவனி வருவதும் இத்தலத்தின் முக்கிய வைபவங்களாகும் அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள திருமஞ்சனம் அலங்கார பூஜைகள் நடைபெறும்.  
     
 தல சிறப்பு:
     
  பெருமாள் கோயில்களில் பக்தர்களை சடாரி வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள். ஆனால் இங்கு கூடுதலாக ராமபாணத்தை (பெரியதாக ராமர் அமைந்த கொடி போன்ற அமைப்பு) தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வது வித்தியாசமான ஒன்று.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.00 மணி முதல் 11.00 வரை. மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை. 
   
முகவரி:
   
  அருள்மிகு திம்மராயப் பெருமாள் திருக்கோயில் கா. புங்கம்பாளையம் கோயம்புத்துார்  
   
போன்:
   
  +91 9942491933 
    
 பொது தகவல்:
     
  கோயிலினுள் நுழைந்தவுடன் நாம் காண்பது தீபஸ்தம்பத்துடன் கூடிய சிறிய மண்டபம் தீபஸ்தம்பத்தின் கீழ் பகுதியில் ஆஞ்சநேயர், சங்கு, சக்கரம் கருடன் ஆகிய புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. முன் மண்டபத்தில் பெருமாளை நோக்கிய வண்ணம் கருடாழ்வார் சேவை சாதிக்கின்றார். மகா மண்டப நுழைவு வாயிலில் துவாரபாலகர்களான ஜெயன் விஜயன் காவல் புரிகின்றனர். அர்த்த மண்டபத்தில் பூமி நீளாதேவி சமேத திம்மராயப்பெருமாள் உற்சவ மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். கருவறையில் மூல மூர்த்தியான திம்மராயபெருமாள் நின்ற கோலத்தில் எழிலுடன் சேவை சாதிக்கின்றார்.

கோஷ்டத்தில் பலதேவர் காளிங்க நர்த்தனர் மற்றும் லக்ஷ்மி நாராயணர் சேவை சாதிக்கின்றனர். கன்னிமூலையில் விஷ்வக்சேனர் சன்னதியும், வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய வண்ணம் இருகரங்கள் கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அமைந்த சன்னதியும், தென் பகுதியில் வடக்கு நோக்கி வீரமாஸ்தியம்மன் சன்னதியும் விமானத்துடன் கூடிய தனிச் சன்னதிகளாக விளங்குகின்றன.

உட்பிரகாரத்தின் தென் பகுதியில் 12 ஆழ்வார்களின் சுதைச் சிற்பங்களும், வடபகுதியில் தசாவதாரம் மற்றும் அஷ்டலட்சுமிகளின் சுதைச் சிற்பங்களும் கலைநயத்துடன் வண்ணக் கலவையில் அழகாக வடிக்கப்பட்டுள்ளன. ஆழ்வார்களின் சுதைச் சிற்பங்களின் கீழ் நம்மாழ்வாரின் திருமேனியை அமைத்துள்ளனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்களின் உண்மையான வேண்டுதல் அனைத்தையும் நிறைவேற்றுகிறார். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றுகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  மூலவர் மற்றும் உற்சவர் சிலைகள் பற்றியும் அதன் தொன்மை பற்றியும் அறியும் பொருட்டு தொல்லியல் நிபுணரை வரவழைத்து ஆராய்ந்து பார்த்ததில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என குறிப்பிட்டுள்ளார். 60 ஆண்டுகள் பழமையான கோயில் என்றாலும் அதன் நேர்த்தியும் சுத்தமும் நம்மை பிரமிக்க வைக்கின்றது.  
     
  தல வரலாறு:
     
  பல நூற்றாண்டுகளுக்கு முன் மைசூரில் முகலாய மன்னர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மற்ற சமூக மக்களை பல வகையிலும் துன்புறுத்தி வந்தனர். ஒரு குலத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களிடமிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ விரும்பினர்.

அவ்வாறு வாழ இனி வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த அவர்கள், அங்கிருந்து வெளியேற முடிவு எடுத்தனர். அக்குல மக்கள் அனைவரும் தாங்கள் தம் உடைமைகளுடன் புறப்பட எத்தனிக்கும் போது பெரியவர் ஒருவர், நம்மோடு இருந்து இது நாள் வரை நம்மையெல்லாம் காத்தருளிய திம்மராயப் பெருமாளை விட்டுவிட்டா செல்கிறோம்? என கேள்வி எழுப்பினார் அப்போது தான் அனைவரும் தம்மை காத்து ரட்சித்த பெருமாளையும் தங்களுடன் எடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.

புறப்படுவதற்கு முன்பு மூல மூர்த்தியையும் உற்சவ மூர்த்தியையும் பத்திரமாக, கொண்டு செல்லும் போது எந்த விதமான பங்கமும் நேரா வண்ணம் சர்வ ஜாக்கிரதையாக தங்களுடன் எடுத்துக் கொண்டனர். பெருமாள் சிலைகளுடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தமிழக எல்லையை அடைந்து தற்போது பவானி டேம் அமைந்துள்ள இடத்திற்கு வந்தனர். மன்னன் டனாய்க்கன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதி அது. அரசரிடம், நாங்கள் கொடுங்கோலன் ஆட்சிக்கு பயந்து பிழைப்பைத் தேடி இங்கு வந்துள்ளோம். எங்களது வாழ்க்கைக்கு தாங்கள் தான் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர். டனாய்க்கன், இந்த வனத்திற்கு அருகில் உள்ள தரிசு நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி வனத்திற்கு அருகில் இருந்த நிலத்தைக் காண்பித்தார்.

அந்நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். கூடவே தாங்கள் குடியிருக்க வீடுகளையும், தாங்கள் கொண்டு வந்த திம்மராய பெருமாள் மூல மூர்த்தியையும் உற்சவரையும் வைக்க ஒரு கோயிலையும் உருவாக்கினர். அக் கோயிலில் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர். அவர்கள் தங்கி விவசாயம் செய்த பகுதி கூத்தாம்பூண்டி என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது கூத்தாம் மண்டி என மருவி விட்டது. இறையருளால் மும்மாரி பொழிய விவசாயம் செழித்தது அனைவரும் நல்ல நிலைக்கு உயர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

அச்சமயத்தில் தான் தலையில் பேரிடி விழுந்ததைப் போன்று அந்த செய்தி இவர்களை எட்டியது. தமிழ்நாடு அரசு பவானி அணைக்கட்டு திட்டத்தைத் தொடங்க ஆயத்தப் பணிகளை மேற்கொண்டனர். நீர்தேக்க பகுதியில் இருந்தவர்களை வெளியேற கெடு விதித்ததுடன் நஷ்ட ஈடும் வழங்கினர். அணை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பெருமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர் அணைக்கு வர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கோயிலுக்கு அருகே வரை நீர் நிரம்பத் தொடங்கியது கோயிலுக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதைக் கருத்தில் கொண்டு கோயில் வேறு இடத்திற்கு மற்ற ஏற்பாடு செய்தனர். சிலை மற்றும் முக்கிய பொருட்களை கோயிலிருந்து அப்புறப்படுத்தி ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்தனர். கோயிலுக்கு தக்க இடத்தை தேடி அலைந்தனர். எங்கும் தோதான இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கோயிலுக்கு இடம் தேடுவதை அறிந்த விவசாயி ஒருவர் (பொன்னப்பகவுடர்) காரமடைக்கு அருகில் உள்ள கா. புங்கம்பாளையம் எனும் ஊரில் 80 சென்ட் பரப்பளவுள்ள நிலத்தை இலவசமாக வழங்க முன்வந்தார். கோயில் கட்டுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.

நிதி ஆதாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் கோயில் கட்டுமான பணி நிறைவடைய சுமார் நான்கு ஆண்டுகள் பிடித்தன. மூலமூர்த்தியான திம்மராய பெருமாளை பிரதிஷ்டை செய்ததுடன் பரிவார தெய்வங்களான ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர் போன்ற தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை விமர்சையாக நடத்தி முடித்தனர். தொடர்ந்து இரண்டு கால பூஜைகள் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி நடந்து வருகின்றது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம்
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள் கோயில்களில் பக்தர்களை சடாரி வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள். ஆனால் இங்கு கூடுதலாக ராமபாணத்தை (பெரியதாக ராமர் அமைந்த கொடி போன்ற அமைப்பு) தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வது வித்தியாசமான ஒன்று.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar