Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர்
  அம்மன்/தாயார்: லட்சுமி தாயார்
  ஊர்: பெரிய காஞ்சிபுரம்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, அனந்தபத்மநாப விரதம்  
     
 தல சிறப்பு:
     
  பெருமாள், லட்சுமி, சிவன் மூலவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மகாகாளேஸ்வர்,அனந்தபத்மநாபர் திருக்கோயில் பெரிய காஞ்சிபுரம் அன்னதானக்கூடம் சாலைத்தெரு காஞ்சிபுரம்.  
   
போன்:
   
  +91 44 2722 4236. 
    
 பொது தகவல்:
     
  விநாயகரும், முருகனும்  சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது  கேதுவுக்குரியதாக திகழ்கிறது.  
     
 
பிரார்த்தனை
    
  தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து  பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை பிரார்த்தனை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர் களுக்கு ஆசியும்  அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இங்கு வருபவர்கள் காஞ்சிபெரியவர் அதிஷ்டானம் சென்றும் வழிபடுவர்.  
     
  தல வரலாறு:
     
  பொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும்  என்பதை உணர்த்தும் வகையில்  திருமால் ஒரு லீலையை  நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி.  கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும்  என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும், என்றாள்.  அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு  சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர்  என்னும் திருநாமத்துடன் சயனகோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற  திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு.  விநாயகரும், முருகனும்  சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது  கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர் களுக்கு ஆசியும்  அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து  பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம். இங்கு வருபவர்கள் காஞ்சிபெரியவர் அதிஷ்டானம் சென்றும் வழிபடுவர்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாள், லட்சுமி, சிவன் மூலவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar