Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆதிகேசவப் பெருமாள்
  அம்மன்/தாயார்: மரகதவல்லித் தாயார், ஆண்டாள்
  ஊர்: கூவத்தூர்
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகுண்ட ஏகாதசி  
     
 தல சிறப்பு:
     
  கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயூ, கோதாவரி, நர்மதை, துங்கபத்தை, காவிரி ஆகிய எட்டு நதிகளும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள இவ்விடத்தில் தவமியற்றியதாகவும், மரகதவல்லி சமேதராக ஆதிகேசவப் பெருமாள் காட்சியளித்து அவர்களை அனுக்கிரஹித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. பாவங்கள் நீங்கப்பெற்று மகிழ்ச்சியடைந்த எட்டு நதிகளும் பெருமானை தினமும் தரிசிக்க விரும்பி இங்கேயே தனித்தனியாக எட்டு கிணறுகளில் தங்கியிருக்கின்றனர் என்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் கூவத்தூர், காஞ்சிபுரம்.  
   
    
 பொது தகவல்:
     
  ஆதிகேசவப் பெருமாள் இங்கு நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு வலப்புறம் மரகதவல்லித் தாயார் சன்னதியும் இடப்புறம் ஆண்டாள் சன்னதியும் உள்ளன. கருடாழ்வார், சக்கரத் தாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களின் சன்னதிகளும் அமைந்திருக்கின்றன.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது தோஷங்களிலிருந்து விடுபட இங்குள்ள தீர்த்த கிணறுகளில் நீராடி பெருமாளையும், தாயாரையும் வணங்கிச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ராமபிரான் அவதரித்த த்ரேதா யுகத்திலிருந்தே இங்கு ஆதிகேசவப் பெருமான் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். மிகப் பழமையான கோயில் இது. த்ரேதா யுகத்தில் ஆஞ்சநேயருக்கும், த்வாபர யுகத்தில் தர்மபுத்திரருக்கும் இப்பெருமான் தரிசனம் தந்து அவர்களின் தோஷங்களைப் போக்கிய தலம் இது.

கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயூ, கோதாவரி, நர்மதை, துங்கபத்தை, காவிரி ஆகிய எட்டு நதிகளும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள இவ்விடத்தில் தவமியற்றியதாகவும், மரகதவல்லி சமேதராக ஆதிகேசவப் பெருமாள் காட்சியளித்து அவர்களை அனுக்கிரஹித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. பாவங்கள் நீங்கப்பெற்று மகிழ்ச்சியடைந்த எட்டு நதிகளும் பெருமானை தினமும் தரிசிக்க விரும்பி இங்கேயே தனித்தனியாக எட்டு கிணறுகளில் தங்கியிருக்கின்றனர்.

கோயில் பிரகாரத்தில் அந்தந்த நதிகளின் பெயர்கள் எழுதப்பட்டு ஏழு கிணறுகளும், கோயிலின் எதிரே அமைந்துள்ள ஆஞ்சநேயர் சந்நிதியில் சரயூ நதிக்கான, கிணறும் அமைந்திருக்கிறது, கூவம் என்ற சொல்லிற்குக் கிணறு என்று ஒரு பொருள் உண்டு. நதிகள் இங்கு கிணறுகளில் தங்கியிருப்பதால் இவ்வூருக்கு கூவத்தூர் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
 
     
  தல வரலாறு:
     
  இராம, இராவண யுத்தம் முடிந்த பின், இராவணனை வதம் செய்து தோஷம் தீர, ராமரும், சீதையும் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய எண்ணி, ஆஞ்சநேயரிடம் சிவலிங்கத்தைக் கொண்டு வருமாறு கூறினர். ஆஞ்சநேயர் வர சற்று தாமதமானதால் சீதாதேவி மண்ணைப் பிடித்து சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்து விட்டார். ஆஞ்சநேயர் வந்து சேர்ந்து, தாம் கொணர்ந்த சிவலிங்கம் ஏற்கப் படாததை எண்ணி ஒரே ஒரு விநாடி சீதாதேவியிடம் கோபம் கொண்டாராம். மறுகணமே தன் தவறை உணர்ந்து, தாயைக் கோபித்துக் கொண்ட பெரும் பாவத்தை எங்கே போக்கிக் கொள்வேன் ? என்று கண்ணீர் வடித்து பல திருத்தலங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட்டார். இத்தலத்திற்கு வந்து இங்குள்ள திருக்குளத்தில் நீராடியவுடன் ஆதிகேசவப் பெருமாள் தரிசனம் தந்து ஆஞ்சநேயரை அனுக்கிரஹித்து அவரின் மன வருத்தத்தைப் போக்கினார். மேலும், கலியுகத்தில் தாயை கவனித்துக் கொள்ளாமல் கைவிடுபவர்கள், அவர்களை தூஷிப்பவர்கள், பொதுவாகப் பெண்களை நிந்திப்பவர்கள் ஆகியோர் ஏராளமாக இருப்பார்கள். அவர்களின் பாவத்திற்கு இங்குள்ள குளத்தில் நீராடி தங்களைத் தரிசித்து சரணடைவதால் பிராயச்சித்தம் ஏற்படட்டும் என்று ஆஞ்சநேயர் பெருமாளிடம் வரம் கேட்டுப் பெற்றதாக வரலாறு. மகாபாரதத்தில், கர்ணனே தன் மூத்த மகன் என்பதை குந்திதேவி சொல்லாமல் மறைத்து விட்டதால் தர்மபுத்திரர் கோபமுற்று, பெண்களிடன் இனி எந்த ரகசியங்களும் தங்காமல் இருக்கட்டும் என்று சாபமிட்டார். பெண்களை சபித்ததால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. அத்தோஷம் விலக, தர்மபுத்திரர் தம் தாய் குந்திதேவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். இங்குள்ள குளத்தில் நீராடி பெருமாளை தரிசித்தவுடன் அவரின் தோஷங்கள் நீங்கியதாக வரலாறு.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயூ, கோதாவரி, நர்மதை, துங்கபத்தை, காவிரி ஆகிய எட்டு நதிகளும் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள இவ்விடத்தில் தவமியற்றியதாகவும், மரகதவல்லி சமேதராக ஆதிகேசவப் பெருமாள் காட்சியளித்து அவர்களை அனுக்கிரஹித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. பாவங்கள் நீங்கப்பெற்று மகிழ்ச்சியடைந்த எட்டு நதிகளும் பெருமானை தினமும் தரிசிக்க விரும்பி இங்கேயே தனித்தனியாக எட்டு கிணறுகளில் தங்கியிருக்கின்றனர் என்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar