Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பீமேஸ்வரர்
  அம்மன்/தாயார்: ஆனந்தவள்ளி
  தல விருட்சம்: வில்வம்
  ஊர்: சின்னவெண்மணி
  மாவட்டம்: காஞ்சிபுரம்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 
-
 
     
 திருவிழா:
     
  பவுர்ணமி, பிரதோஷம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், சிவராத்திரி.  
     
 தல சிறப்பு:
     
  கிழக்கே பார்த்த மூலவரானின் மேல் 6 மாதத்திற்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில், பௌர்ணமிக்கு முன் இரண்டு நாள், பின் இரண்டு நாளும், அதே போன்று பங்குனி உத்திரத்திற்கு முன் இரண்டு நாள், பின் இரண்டு ஆகிய நாட்களில் காலை 6.20 மணியில் இருந்து 6.40 மணி வரையில் சூரியன் ஒளி நேராக மூலவரின் மீது படும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோயில்களிலும் காண முடியாத சிறப்பம்சம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  தர்மகர்த்தா, அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில் சின்னவெண்மணி கிராமம், ஒழவெட்டி அஞ்சல், ஜமீன் எண்டத்தூர் வழி, மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம்.  
   
போன்:
   
  +91 9443209278 
    
 பொது தகவல்:
     
  கோயிலின் இடதுபுறம் ஆனந்தவள்ளி உடனுரை அம்மாளும், அதே இடதுபுறத்தில் குபேரலிங்கமும் உள்ளது. இந்த கோவிலில் உள்ள நவகிரகங்கள் மற்ற நவகிரகங்களின் தலங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. மற்ற இடங்களில் சூரியன் கிழக்குமுகமாக இருக்கும். ஆனால் இங்கு சூரியன் மேற்கு நோக்கிய பார்வையில் உள்ளது. இங்குள்ள அம்மாளுக்கு வெளிச்சம் தருவதற்காக சூரியன் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.மேலும் குரு தெற்கும், சுக்கிரன் மேற்கும், புதன் மேற்கும், சந்திரன் கிழக்கும், அங்காரகன் வடக்கும், ராகு தெற்கும், சனிஸ்வரர் கிழக்கும், கேது வடக்கும் ஆகிய திசைகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதியின் கீழே ஆறுகள் ஓடுவதாகவும், முன்பு இந்த பகுதிகள் மஞ்சள் காடுகளாக இருந்ததாக பக்தர்கள்  நம்மப்படுகின்றனர்.பிரகாரத்தில் விநாயகர், ஐயப்பன், வள்ளி தெய்வானை மேத சுப்ரமணியர், ஜெகலட்சுமி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், நவகிரகங்கள், பைரவர் மற்றும் துவார பாலகர்கள் அமைந்துள்ளனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  கோயிலுக்கு வந்து வழிப்பட்டால் ராகுகேது தோஷம் நீங்கும் என்று பக்தர்கள் வந்து வழிப்பட்டு செல்கின்றனர். மேலும் குழந்தை பேறு, நோய் நீக்குதல், திருமணத்தடை உள்ளிட்டவைகள் நீங்கும்.  மேலும் இந்த கோயிலில் நவகிரகம், நட்சத்திரம், ராசி பலன்களுக்காக 48 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அந்தந்த நட்சத்திரபலன் உள்ளவர்கள் சுற்றி வந்தால் அவர்களுக்கு சிறப்பு பலன்கள் கிட்டும் என கூறப்படுகிறது. 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  புராதான பழமைவாய்ந்த கோயிலாகும். இக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கருங்கற்களால் நிறுவபட்டுள்ளது.

நட்சத்திர மரங்கள்: பஞ்ச பூதங்களில் உள்ளடங்கிய சிவ வழிபாட்டில் இறைவனை வேண்டி வணங்கும் வகையில் இவ்வாலயத்தில் 27 நட்சத்திர மரங்கள் நிறுவபட்டுள்ளது. பக்தர்கள் அவரவர் நட்சத்திரம், ராசிக்கு உகந்த மரங்களை வழிபடுகிறார்கள்.

ஆலயத்தின் கல்வெட்டு சிறப்பம்சம்: நுழைவாயில் மண்டபத்திலும் ஆனந்தவல்லி அம்மன் கருவறையிலும் நிலவும் பாம்பும் கல்வெட்டில் தோன்றியுள்ளதால் இவ்வாலயத்தில் வந்து வழிபடுவோர்க்கு ராகு கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். அம்மனின் நேரடிப்பார்வையில் தாமரை திருக்குளம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

மாமுனிவர் முக்தியடைந்த தலம்: இவ்வாலயத்தை வலம் வரும்போது அமைந்துள்ள குபேர லிங்கத்தில் மாமுனிவர் இவ்விடத்தில் முக்தியடைந்ததாக நம்புகின்றனர். இவ்வாலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுவர்களுக்கு பீமனை போன்ற மனஉறுதியும் தேக ஆரோக்கியமும் பெருகும் என்பது அனுபவவுண்மையாகும்.
 
     
  தல வரலாறு:
     
  மகா பாரததத்தில் பஞ்சபாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் சென்றபோது, அவர்களில் ஒருவரான பீமனால் பூஜிக்கப்பட்ட சிவஸ்தலம் என்று வரலாறு கூறுப்பிடுகிறது. பாண்டியர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கோயிலை சுற்றி, நான்கு புரங்களில் பல சிவஸ்தலங்கள் உள்ளது. வடக்கு தர்மாபுரத்தில் குந்தியால் பூஜிக்கப்பட்ட குந்தீஸ்வரர்  ஆலயமும், வடகிழக்கு திருவாதூர் கிராமத்தில் தர்மரால் பூஜிக்கப்பட்ட தர்மேஸ்வரர் ஆலயமும், தெற்கே பெரியவெண்மணியில் விஜயேஸ்வரர் ஆலயமும், நாகமலை கிராமத்தில் நகுலனால் பூஜிக்கப்பட்ட நகுலேஸ்வரர் ஆலயமும், தேவனூரில் சகாதேவனால் பூஜிக்கப்பட்ட சகாதேவிஸ்வரர் ஆலயம் உள்ளது. மற்ற கோயில்களை காட்டிலும், சின்னவெண்மணி கோயிலில் உள்ள சிவலிங்கம் மட்டும் பிரசித்திபெற்றதாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஐந்து தலை நாகம் உள்ளது. திருபாற்கடலை கடையும்போது, ராகு அமுதம் பெறுவதற்காக இடமாறி தேவர்களின் வரிசையில் உட்கார்ந்தபோது, மகாவிஷ்னுவால் தலையில் கொட்டியதால், ஒரு தலை நாகம், ஐந்து தலை நாகமாக உருவெடுத்ததாக வரலாறு கூறுகிறது. அப்போது, சிவனின் இரண்டு கண்களாகிய சூரியனும், சந்திரனும் விழுங்கி விடுவதாக ராகு சபதம் இட்டுள்ளார்.அப்படி வேண்டினால் உலகம் இருண்டுவிடும் என எண்ணிய மகா விஷ்னு, அவர்களை சிறிது சிறிதாக முக்கால்வாசி வரையில் மட்டும் விழுங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனாலே தற்போது சந்திர கிரகனமும், சூரிய கிரகனமும் உருவாகுவதாக இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: கிழக்கே பார்த்த மூலவரானின் மேல் 6 மாதத்திற்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில், பௌர்ணமிக்கு முன் இரண்டு நாள், பின் இரண்டு நாளும், அதே போன்று பங்குனி உத்திரத்திற்கு முன் இரண்டு நாள், பின் இரண்டு ஆகிய நாட்களில் காலை 6.20 மணியில் இருந்து 6.40 மணி வரையில் சூரியன் ஒளி நேராக மூலவரின் மீது படும் வகையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோவில்களிலும் காண முடியாத சிறப்பம்சம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar