Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கரந்தமலை அய்யனார் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு கரந்தமலை அய்யனார் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: அய்யனார்
  அம்மன்/தாயார்: பூரணவள்ளி, சுந்தரவள்ளி
  ஊர்: மணக்காட்டூர்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசியில் பெருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் அய்யனார் சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சியளிப்பார். சுவாமிக்கு சந்தனக்காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  அற்புதங்களை நிகழ்த்தும் அய்யனார் சுவாமி பூரணவள்ளி தேவி, சுந்தர வள்ளி தேவி சமேதரராய் திண்டுக்கல் அருகே கரந்தமலையில் எழுந்தருளியிருப்பது வேறெங்கும் காணாத தனிச்சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கரந்தமலை அய்யனார் திருக்கோயில், மணக்காட்டூர், நத்தம் தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம்  
   
போன்:
   
  +91 8098476415 
    
 பொது தகவல்:
     
  கோயில் வளாகத்தின் வலதுபுறம் சின்னக்கருப்பு, இடதுபுறம் பெரிய கருப்பு  சுவாமிகள் காவல் தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். பூரணவள்ளி தேவி, சுந்தரவள்ளி தேவி சமேதரராய் மூலவர் அய்யனார் சுவாமி  அருள்பாலிக்கிறார். கோயில் முன் குதிரை வாகனங்களை வடிவமைத்துள்ளனர். 
 
     
 
பிரார்த்தனை
    
  செல்வவளம், சகல நோய்களையும் குணப்படுத்துதல், குழந்தை பாக்கியம் , கல்வி வளம் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  கருப்பசாமிக்கு ஆடு சேவல், அய்யனாருக்கு குதிரை எடுப்பும் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூர் அருகேயுள்ள அடர்ந்த கரந்தமலை  வனத்திற்குள் அய்யனார் சுவாமி எழுந்தருளியுள்ளார். அண்டியோரை வாரியணைக்கும் அற்புத தெய்வமாக அய்யனார் சுவாமி வணங்கப்படுகிறார். குல தெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும்,  காவல் தெய்வமாகவும் அய்யனார் சுவாமி பக்தர்களின் மனதில் நிரந்தரமாக குடிகொண்டு அருள்பாலிக்கிறார்.
   
நோய் தீர்க்கும் மூலிகை அருவி:  வன ராஜாவான அய்யனார் சுவாமிக்கு  மண்டபத்துடன் கூடிய கோயில் எழுப்பியுள்ளனர். பழமையான இக்கோயிலுக்கு 20 ஆண்டுக்கு முன் முதல் கும்பாபி ?ஷகமும்,  சமீபத்தில் இரண்டாவது கும்பாபி ?ஷகமும் மணக்காட்டூர் கிராம மக்கள் மற்றும் பூசாரி வகையறாக்களால் நடத்தப்பட்டது.  அய்யனார் கோயிலில் இருந்து 1 கி.மீ., தொலைவு மலைப்பாதையில் நடந்து சென்றால் என்றுமே வற்றாத அய்யனார் மூலிகை அருவியில்  தண்ணீர் கொட்டிய வண்ணம் இருக்கும். வனத்தின் மூலிகை காற்றை சுவாசித்து அய்யனார் அருவியில் குளித்து வந்தால் தீராத நோய்களும்  அற்றுப்போகும் என்பது நம்பிக்கை.

மணக்காட்டூர் மெயின்ரோட்டில் இருந்து வனத்தில் உள்ள கரந்தமலை அய்யனார் கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும். அடர்ந்த வனம் என்பதால் பக்தர்கள் குழுவாக செல்வது பாதுகாப்பு மிக்கது. தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். பாலிதீன் பொருட்களை கொண்டு  செல்ல வேண்டாம். அய்யனார் அருவியில் குளித்த பின் தியானம் செய்வது சிறப்புமிக்கது. அருவி தீர்த்தம், விபூதியை எடுத்து வந்து நடக்க  முடியாதவர்களுக்கு கொடுப்பது சாலச்சிறந்தது.
 
     
  தல வரலாறு:
     
  மணக்காட்டூர் பகுதி மக்கள் தங்களுக்கு காவல் தெய்வமாக இருப்பதற்காக அய்யனாரை பூரணை மற்றும் சுந்தரவள்ளி அம்மனுடன் பிரதிஷ்டை செய்து வழிபடத்துவங்கினர். காலப்போக்கில் இது அனைத்து பகுதி மக்களும் வழிபடும் வழிபாட்டு தலமாக மாறியது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அற்புதங்களை நிகழ்த்தும் அய்யனார் சுவாமி பூரணவள்ளி தேவி, சுந்தர வள்ளி தேவி சமேதரராய் திண்டுக்கல் அருகே கரந்தமலையில் எழுந்தருளியிருப்பது வேறெங்கும் காணாத தனிச்சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar