Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜ பெருமாள்
  ஊர்: தண்டையார்பேட்டை
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஒவ்வொரு வைகாசியிலும் இங்கு பிரம்மோற்சவம் நடக்கும். புரட்டாசி மாதத்தில், ஒவ்வொரு வாரமும், புஷ்ப அலங்காரம், சந்தன காப்பு, வெண்ணெய் காப்பு என, பெருமாளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக, ஆராதனைகள் நடக்கும்.  
     
 தல சிறப்பு:
     
  இக்கோவிலில், பெருமாள் சிலை வடக்கு நோக்கி இருப்பது சிறப்பம்சம் என்கின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6:00 மணி முதல் காலை 11:00 மணி வரை மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். (விசேஷ நாட்களில் மாறுபடும்) 
   
முகவரி:
   
  அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், வரதராஜ பெருமாள் கோவில் வீதி, அப்பல்லோ மருத்துவமனை அருகில், தண்டையார்பேட்டை, சென்னை.  
   
போன்:
   
  +91 98402 79573 
    
 பொது தகவல்:
     
  ஆண்டாள், காயத்ரி, ராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர் உள்ளிட்ட சன்னிதிகளும் இக்கோயிலில் உள்ளன. இக்கோயில், தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது. சமீபத்தில், 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது, அறநிலையத்துறை. அதில், சன்னிதி, கொடி மரம், பலி பீடம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர்,  குழந்தைப்பேறுக்காக இங்கு பிரார்த்திக்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  திருமஞ்சனம் செய்யப்படுகிறது. 
    
 தலபெருமை:
     
  இக்கோவிலின் முக்கிய சிறப்பு, பெருமாளுக்கு குழந்தையை தத்து கொடுப்பது. இதை ஒரு பரிகார நிகழ்ச்சியாக பக்தர்கள் கடைபிடிக்கின்றனர். ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், தம் குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுப்பர்; பின் பெருமாளிடம் இருந்து தத்தெடுக்கின்றனர். இதுவரை, 5,000க்கும் மேற்பட்டோர், குழந்தைகளை பெருமாளிடம் இருந்து தத்தெடுத்துள்ளனர். மலேஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்களும், குழந்தைகளை பெருமாளுக்கு தத்து கொடுக்கின்றனர். பெருமாளுக்கு குழந்தைகளை தத்து கொடுத்தால், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சேர்ந்து, எல்லா வித சொத்துக்களும் சேரும் ஐதீகமாக இருக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  அவர் வெறும் பெருமாள் இல்லை; வரதராஜ பெருமாள். வரம் தரும் ராஜன் என்பதால், அவர் வரதராஜ பெருமாள் ஆக இங்கு காட்சியளிக்கிறார். சென்னை, தண்டையார்பேட்டையில், 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் வீற்றிருக்கும் இந்த பெருமாள் தான், இப்பகுதியிலுள்ள பல ஆயிரம் மீனவ மக்களின் குல தெய்வம். அரசர்கள் காலத்தில், செல்வந்தர் ஒருவர், தான் கொடுத்த கடனுக்கு ஈடாக, அவர் வீட்டில் இருந்த பெருமாள் சிலையை, கட்டை வண்டியில் எடுத்து வந்து, தண்டையார்பேட்டை காட்டில், யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பின், மக்களால் கண்டெடுக்கப்பட்டு, அதே இடத்தில் சிறிய அளவிலான கோயிலை மக்கள் எழுப்பியதாக செவிவழி வரலாறு கூறுகிறது. பெருமாளை குல தெய்வமாக வழிபடும் மீனவ மக்கள், ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம், விரதம் இருந்து, தங்கள் வேண்டுதல்களை அவரது பாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். இவ்வழக்கம். பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது. தங்கள் வாழ்வின் மாற்றங்கள், முன்னேற்றங்களுக்கு வரதராஜ பெருமாள் தரும் வரமே காரணமென்பது, இம்மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோவிலில், பெருமாள் சிலை வடக்கு நோக்கி இருப்பது சிறப்பம்சம் என்கின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar