Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: காயத்ரி லிங்கேஸ்வரர்
  தல விருட்சம்: இலந்தை மரம்
  ஊர்: பவானி
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மூன்று நதிகள் பாய்வதால் "தீர்த்த சங்கமம்' என்றும், ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் "÷க்ஷத்திர சங்கமம்' என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்ரலிங்கேஸ்வரர் மற்றும் காயத்ரி லிங்கேஸ்வரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கினைந்து உள்ளதால் "மூர்த்தி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி-638301, ஈரோடு மாவட்டம்.  
   
போன்:
   
  + 91-4256-230 192, 98432 48588 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்தை சுற்றிலும் சங்ககிரி மலை, திருச்செங்கோட்டில் உள்ள நாககிரி, பெருமாள் மலையில் உள்ள மங்கலகிரி, ஊராட்சிகோட்டையில் உள்ள வேதகிரி மற்றும் காவிரியாற்று ஓரம் பதுமகிரி ஆகிய மலைகளுக்கு நடுவே இருப்பதால் பாவனி ஸ்தலம் "பஞ்சகிரி மத்திய பிரதேசம்' என அழைக்கப்பட்டது.
 
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  "மந்திரங்களின் ராஜா" எனப்படும் காயத்ரி மந்திரத்தை, அவன் முன் சென்று ஒருமுறை சொன்னால் போதும்; ஒரு லட்சம் முறை சொன்ன பலனை நாம் அடைந்து விடலாம். மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் அருகில் காவிரி யாற்றின் ஓரத்தில் தனித்து நின்று தன்னிகரில்லாத பலன்களை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார் காயத்ரி லிங்கேஸ்வரர். இத்தலத்தில் மூன்று நதிகள் பாய்வதால் "தீர்த்த சங்கமம்' என்றும், ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் "சேத்திர சங்கமம்' என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்ர லிங்கேஸ்வரர் மற்றும் காயத்ரி லிங்கேஸ்வரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கினைந்து உள்ளதால் "மூர்த்தி சங்கமம்' என்றும் அழைக்கப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரியாற்றோரம் "காயத்ரி லிங்கேஸ்வரர்' தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கிச் சென்றால் வேண்டிய வரங்களை உடனே பெறலாம் என்பது ஐதீகம்.

பராசர முனிவர், குபேரர், சூரியன் ஆகியோர் மூலஸ்தானம் வந்து வணங்கிச் சென்றனர். இத்தல விருட்சம் இலந்தை மரம். காயத்ரி லிங்கேஸ்வரர் முன்னால் சென்று, காயத்ரி மந்திரத்தை சொல்லத் தகுதியுடைய உச்சரிப்பு பிறழாமல் சொல்லக்கூடியவர்கள், ஒரு தடவை சொன்னால் போதும், லட்சம் தடவை சொன்ன பலன் கிட்டும்.
 
     
  தல வரலாறு:
     
  இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், "காயத்ரி லிங்கேஸ்வரர்" அங்கே தானாகவே தோன்றினார்.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar