Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கோதண்டராமசுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கோதண்டராமசுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கோதண்டராமர்
  அம்மன்/தாயார்: சீதா பிராட்டி
  ஊர்: கருங்கல்பாளையம்
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ராம நவமி உத்ஸவம், சக்கரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக நடந்து வருகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  தமிழகத்தில் ராமருக்குரிய முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், கருங்கல்பாளையம் - 638 001 ஈரோடு மாவட்டம்.  
   
போன்:
   
  +91-424 - 221 28 16. 
    
 பொது தகவல்:
     
  சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.  
     
 
பிரார்த்தனை
    
  வெள்ளிக்கிழமைகளில் ராமபிரான், சீதா தேவிக்கு நெய்தீபம் ஏற்றி, 12 கோயில் பிரகாரத்தை வலம் வந்து அர்ச்சனை செய்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பதும், 16 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து 16 முறை பிரகாரம் வலம் வந்தால் மனோவியாதி, தொழில் தடங்கல் ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கை.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, 16 முறை சுற்றி வந்து அர்ச்சனை செய்தால் திருமணத் தடை நீங்கும் என்கிறார்கள்.

வியாழக் கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் லோகநரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து 16 முறை சுற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கி, சகல காரிய சித்தி ஏற் படும் என்பது நம்பிக்கை.

செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வாரை 12 முறை சுற்றி அர்ச்சனை செய்து வந்தால் தீராத நோய்கள் நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தன்று ராமானுஜருக்கு நெய் தீபம் ஏற்றி, 12 முறை சுற்றி வந்தால் சரும நோய் நீங்கும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  கோதண்டராமருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். 
    
 தலபெருமை:
     
  ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தன்று கோதண்டராம சுவாமிக்கும், சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கும், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும், சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் கூட்டு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.

தினசரி வழிபாடு: காலை 7.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 8 மணிக்கு தரிசன நேரம், 9.30 மணிக்கு காலை பூஜை, 10.30 மணிக்கு தரிசன பூஜை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தரிசன பூஜை, 6 மணிக்கு இரவு பூஜை, இரவு 7 மணிக்கு தரிசன பூஜைகள் நடக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
  திருமணம், சமூக மற்றும் மத வழிபாடு கூட்டங்கள் நடத்த ஏதுவாக 1974ம் ஆண்டில் ஈரோடு ரங்கபவனம் டிரஸ்ட் சார்பில் சமுதாய கூடம் ஒன்று நிறுவப்பட்டது. இங்கு சித்தி விநாயகர் கோயிலும், நவக்கிரகங்கள் சன்னதியும் கட்டப்பட்டன. கும்பாபிஷேகத்தை காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நடத்தி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் ஸ்ரீகோதண்டராமர், சீதா பிராட்டி, லட்சுமணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மகாஸம்ப் ரோஷணம் அஹோபில மடத்தின் 44ம் பட்டம் ஸ்ரீ மத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமியால் நடத்தப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: தமிழகத்தில் ராமருக்குரிய முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar