Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: முத்துவேலாயுத சுவாமி
  தீர்த்தம்: சரவணப் பொய்கை
  ஊர்: மலையப்பப்பாளையம்
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி விசாகம், சித்திரைப் பிறப்பு, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஐப்பசி கந்த சஷ்டி, கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி திருவாதிரை, தை பிரமமோத்ஸவம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கே சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவது தலத்தின் சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில், உதயகிரி, மலையப்பப்பாளையம், கோபிசெட்டிப்பாளையம்,ஈரோடு மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  காசிவிசாலாட்சி, காசி விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, பைரவர், துர்கை ஆகிய தெய்வங்களுக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  உடலில் தேமல், கட்டி, தோல்வியாதிகள் நீங்கவும், கடல் தொல்லையிலிருந்து விடுபடவும், வியாபாரத்தில் அதிக லாபம் பெறவும், தீராத நோயால் அவதிப்படுவோர், திருமணத் தடைகள் நீங்கவும், சுகப்பிரசவம் ஆகவும் பக்தர்கள் இங்குள்ள முருகனை பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முருகனுக்கு வெல்லம், பொட்டுக்கடலை சமர்ப்பித்தும், உதயகிரி நாதனுக்கு செவ்வரளி மாலை சார்த்தியும், 108 தீபமேற்றியும், சந்தனக் காப்பு செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள்காப்பு அலங்கார வழிபாடு செய்து சகல ஐஸ்வரியங்களையும் பெற்று தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயிலுக்கு வடக்கே சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. உடலில் தேமல், கட்டி போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப்படுவோர், தீர்த்தப்பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால், விரைவில் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்! பங்குனி உத்திர விழாவின்போது, சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள், திருவீதியுலாக்கள் என அமர்க்களப்படும் கோயில். இந்த நாளில், தீராத நோயால் அவதிப்படுவோர் மற்றும் கடன் தொல்லையால் சிக்கித் தவிப்பவர்கள், வியாபாரத்தில் அதிகலாபம் கிடைக்கவேண்டும் என வேண்டுவோர் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்வார்கள். அதேபோல், உதயகிரி நாதனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, 108 தீபமேற்றி வழிபட்டால், விரைவில் திருமணத் தடைகள் நீங்கும்; கல்யாண வரம் கைகூடி வரும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்; கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சத்துடன் வாழலாம் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள். சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவதைத் தரிசிக்கலாம். இந்த நாளில் முருகப் பெருமானைத் தரிசிப்பது விசேஷம்! எனவே இந்த நாட்களில், ஈரோடு மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வர் (இதனால்தான் இந்த மலைக்கு, உதயகிரி எனப் பெயர் அமைந்ததாகவும் சொல்வர்).  
     
  தல வரலாறு:
     
  சுமார் 600 வருடங்களுக்கு முன்பு, எம்மாம்பூண்டி கிராமத்தில் உள்ள முத்துக்குமார செட்டியார் என்பவர் கட்டிய கோயிலாம் இது! பிறகு, அந்த ஊர்க்காரர்கள் அடிக்கடி இங்கு வந்து முருகப்பெருமானை மனமுருகப் பிரார்த்தனை செய்து வந்தனர் என்கிறது ஸ்தல புராணம்.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவது தலத்தின் சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar