Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சின்ன மாரியம்மன்
  தல விருட்சம்: வேப்பமரம், அரசமரம்
  ஊர்: கருங்கல்பாளையம்
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழாவன்று ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. சித்திரை மாதத்திலே சித்திரைக் கனி திருவிழா நடந்து வருகிறது. பவுர்ணமி தோறும் குத்துவிளக்கு திருப்பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் சந்தன மஞ்சள் காப்புடன் அம்மனுக்கு அலங்காரமும் செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இந்த கோயிலின் வாசிலில் வேப்பமரமும், அரச மரமும் இருப்பது சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பூச்சாட்டுதல் நடக்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம் - 638001 ஈரோடு மாவட்டம்.  
   
போன்:
   
  +91-424 - 2430114 
    
 பொது தகவல்:
     
  திருமுகன்பூண்டியில் இருந்து அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு கடந்த 89ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு கோபுரம் கட்டப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  
     
 
பிரார்த்தனை
    
 

குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டால் அவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.


ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகளாய் குழந்தை இல்லாதவர்கள் பலர் இங்கு வந்து அம்மனை தரிசித்து குழந்தை பேறு பெற்றுள்ளனர்.


இக்கோயிலின் முன்புறமுள்ள வேப்ப மரம், அரச மரம் ஆகியவற்றில் தொட்டிலை கட்டி தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.


இக்கோயிலில் கொடுக்கப்படும் விபூதிக்கு தனி சிறப்புண்டு என்கின்றனர் பக்தர்கள். தலைவலி, வயிற்றுவலியின் போது நெற்றி நிறைய விபூதியை பூசிக் கொள்ள வேண்டும்.


சிறிது விபூதியை வாயில் போட்டு கொண்டால் பல வியாதிகள் குணமடைய செய்கிறார் அம்மன் என்கிறார்கள் பக்தர்கள்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  ஆரம்பத்தில் குடிசையில் சிறிய கூழாங்கல்லை வைத்து அம்மனை குழந்தைகள் தரிசித்து வந்தனர். இதையே நாளடைவில் அம்மனாக வழிபட்டனர். பின்னர் சிறிய கோயில் கட்டி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த கோயிலின் வாசிலில் வேப்பமரமும், அரச மரமும் இருப்பது சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பூச்சாட்டுதல் நடக்கிறது. அதே போல்  பூவோடு எடுத்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

கார்த்திகை மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்ட விழவின் ஒரு அங்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.

குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் திரண்டு வருவர்.
 
     
  தல வரலாறு:
     
 

வீட்டில் குழந்தைகள் கடவுள் பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.அதுபோல, ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு கூழாங்கல்லை வைத்து விளையாட்டாக சிறுவர், சிறுமிகள் விளையாடிய இடம் ஒரு கோயிலாக மாறி விட்டது.சிறுவர்கள் கட்டிய கோயில் என்பதால், சின்ன மாரியம்மன் கோயில் எனப் பெயர் பெற்றது. இந்த கோயில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறது.


 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar