Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வசிஷ்டேஸ்வரர்
  அம்மன்/தாயார்: உலகநாயகியம்மை, மங்களாம்பிகை
  தல விருட்சம்: முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி
  தீர்த்தம்: சக்கர தீர்த்தம், சூலதீர்த்தம்
  புராண பெயர்: திருத்தென்குடித்திட்டை, திட்டை
  ஊர்: தென்குடித்திட்டை
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம் பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 15வது தலம்.
 
     
 திருவிழா:
     
  மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, குருப்பெயர்ச்சி  
     
 தல சிறப்பு:
     
  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார்.உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார்.மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். நவக்கிரகத்தில் உள்ள வியாழன் (குரு) தனி சன்னதியில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 78 வது தேவாரத்தலம் ஆகும். நித்யாபிஷேகம் செய்வது வேறெங்கும் காண இயலாத சிறப்பு. சந்திரனின் வழிபாடாக இந்த அபிஷேகம் நிகழ்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை- 614 206.தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4362 252 858, 94435 86453 
    
 பொது தகவல்:
     
  வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர். நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார். தவிர, தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார். பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள். மேலும், விநாயகர், முருகர், ராஜகுரு, பைரவர் ஆகியோரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.

நவக்கிரகங்களில் சுபகாரகர் குருபகவான், தான் இருக்கும் இடம் மட்டுமின்றி; பார்க்கும் இடத்திலுள்ள மற்ற கிரகங்களின் தோஷத்தையும் போக்கும் வல்லமை பெற்றவர். தஞ்சை பெருவுடையார் கோயிலை அடிப்படையாகக் கொண்ட சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று திருத்தென்குடித்திட்டை எனப்படும் திட்டை திருத்தலம். இங்கு, வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னிதிகளுக்கு இடையே குரு பகவான் ராஜகுருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
 
     
 
பிரார்த்தனை
    
 

இங்கு வேண்டிக்கொள்ள குரு தோஷம் நீங்கும். கல்வி, செல்வங்களால் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.



 
    
நேர்த்திக்கடன்:
    
  குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடலாம். 
    
 தலபெருமை:
     
  முருகன் சிறப்பு: திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.

சூரிய பூஜை: சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். இதேபோல் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். இவ்விரு காலங்களில் சுவாமிக்கு சூரிய பூஜை நடப்பது சிறப்பாகும்.

சிறப்பு: மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். பிரகாரத்தில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்கள் உள்ளது.

குருதலம்: குரு ஸ்தலங்களில் முக்கியமான தலம் இது. பொதுவாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் குருபகவான், இத்தலத்தில் நின்ற நிலையில் தனி சன்னதியில் ராஜகுருவாக இருக்கிறார்.இங்கே வந்து தன்னை வேண்டுவோருக்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்பதற்காக குருபகவான் நின்ற நிலையிலேயே அருள்பாலிக்கிறார் என்கின்றனர். நின்ற நிலையிலுள்ள குருவை வழிபட்டால் மேடைப் பேச்சில் பயம் இருக்காது என்பது நம்பிக்கை. குருபெயர்ச்சியால் ஜாதக ரீதியாக பாதிக்கப்படலாம் என கருதுவோர் மட்டுமின்றி, கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள் இங்கு குருபகவானை வழிபடுகின்றனர்.

அம்மன் சன்னிதி மேல் விதானத்தில் 12 ராசிக் கட்டங்கள் உள்ளன. அந்தந்த ராசியினர் தங்கள் ராசிக்கட்டத்தின் கீழே நின்று பிரார்த்தனை செய்வதால் சகல தோஷங்களும் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம். அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன், கொடி மரம், விமானம் என அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட கோயில். கோயிலின் வெளியே அழகிய தீர்த்தக்குளம் உள்ளது. தேவ மங்கையர்களும், தேவர்களும் முல்லை, மல்லிகை போன்ற கொடிகளாகவும், வில்வம், அரசு, பலாசம் முதலிய மரங்களாகவும் நின்று தலவிருட்சங்களாக இறைத்தொண்டாற்றுகின்றனர். வரங்களை வாரி வழங்கும் வசிஷ்டேஸ்வரர் கோயில் ராஜகுருவை வணங்கி குருவின் திருவருளையும், அம்மையப்பனின் பேரருளையும் பெற்று வாழ்வில் உயர்நிலை அடைவோம்.
 
     
  தல வரலாறு:
     
  திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும். ஒரு பிரளய காலத்தில் இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. "ஓம்' என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதி காலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி.

மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் "ஓம்' என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் "ஹம்' என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று.

இறைவன், இறைவியுடன் விரும்பி குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். வசிஷ்டா முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் வசிஷ்டேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அம்பாள் உலகநாயகியம்மை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar