Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: குபேரபுரீஸ்வரர்
  ஊர்: தஞ்சாவூர்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை, தீபாவளி.  
     
 தல சிறப்பு:
     
  குபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் இருக்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில் தஞ்சாவூர்-613 001 தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91-96778 18114 
    
 பொது தகவல்:
     
 

குபேரனின் அருகில் லட்சுமிதேவி, தனலட்சுமியாகவும், தைரிய லட்சுமியாகவும் வடிவம் தாங்கி அமர்ந்திருப்பாள்.


 
     
 
பிரார்த்தனை
    
 

தீபாவளித் திருநாளிலும், வெள்ளிக்கிழமைகளிலும் இந்த குபேரனை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
 

குபேரன் வரலாறு : பிரம்மாவின் மனதில் இருந்து புலஸ்தியர் என்ற மகன் தோன்றினார். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார். விச்வரஸ் முனிவராயினும், சுமாலி என்ற அரக்கனின் மகள் கேகஸியைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் தாயின் குணநலத்துடன் மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அவர்களே ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர். இதன் பின் விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். இக்குடும்பத்தில் பிறந்த ஆண்மக்களில் ராவணனும், குபேரனும் சிவ பக்தர்கள். கும்பகர்ணன் தன் கொள்ளுத்தாத்தா பிரம்மாவின் பக்தன். விபீஷணன் பெருமாள் பக்தன். இது எதிலும் சேராமல் பெண் என்ற சொல்லுக்கே களங்கம் ஏற்படுத்த சூர்ப்பனகைக்கு பக்தியும் கிடையாது. பெண்ணுக்குரிய நாணமும் இல்லாமல், ஆணழகர்களை தேடித்திரியும் காமாந்தகாரி.


ராவணன் சிவபக்தனாயினும் பெண் பித்தன். கும்பகர்ணன் சாப்பாட்டு ராமன். விபீஷணனும், குபேரனும் தப்பிப் பிறந்தவர்கள். அசுரகுணங்கள் எதுவும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. ராவணன், சிவ பெருமானிடம் மனிதரைத் தவிர பிறரால் அழியக்கூடாது என்ற வரம் பெற்றவன். குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனவன். மேலும் சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு, அவரவர் விதிப்பயனுக்கேற்ப செல்வத்தைக் கொடுத்து வர கட்டளையிட்டார். இந்நிலையில், திருமாலின் மனைவியான மகாலட்சுமி, எட்டுவிதமான சக்திகளைப் பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவளது சக்திகள் அனைத்தையும் சங்கநிதி பதுமநிதி என்ற வாலிபர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்கு பிள்ளைகளாக நியமித்துக் கொண்டார் குபேரன்.


குபேரனின் இருபுறமும் இவர்கள் அமர்ந்தனர். குபேரன் அரசாட்சி நடத்த, அழுகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பியான விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். இங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இருந்த அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட பட்டு மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினான் குபேரன். கிரீடம், தங்க ஆபரணம் அணிந்து முத்துக்குடையின் கீழ் அமர்ந்த இவன், கையால் அபயமுத்திரை காட்டுவான். அதாவது, பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன் இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவரது பணி. இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பத்மநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பான். இவன் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவன். இவனது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள்.


 
     
  தல வரலாறு:
     
 

குபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் "தஞ்சபுரீஸ்வரர்' எனப்பட்டார்.  ராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான்.


இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு "தஞ்சவூர்' என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில் "தஞ்சாவூர்' ஆனதாக தல புராணம் குறிப்பிடுகிறது. குபேரபுரீஸ்வரர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: குபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் இருக்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar