Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சோமேசர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சோமேசர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சோமநாதர், சோமேசர்
  அம்மன்/தாயார்: சோமகலாம்பிகை
  தல விருட்சம்: நெல்லி
  தீர்த்தம்: சோம தீர்த்தம், கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம்
  புராண பெயர்: பழையாறை வடதளி, ஆறைவடதளி
  ஊர்: கீழபழையாறை வடதளி
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  திருநாவுக்கரசர்

தேவாரபதிகம்

குண்டரைக் குணமில்லரைக் கூறையில் மிண்டரைத் துரந்த விமலன்றனை அண்டரைப் பழையாறை வடதளிக் கண்டரைத் தொழுது உய்ந்தன கைகளே.

-திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 24வது தலம்.
 
     
 திருவிழா:
     
  ஐப்பசி பவுர்ணமி, திருகார்த்திகை, மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி,  
     
 தல சிறப்பு:
     
  இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழ வரலாற்று சிறப்புமிக்க ஊர். இன்று சிதிலமடைந்து உள்ளது. பழையாறை கோயிலும் பழையாறை வடதளியும் சேர்த்து பாடப் பட்டதாக கொள்ள வேண்டும். அருகில் வைணவ திவ்யதலம் நந்திபுர விண்ணகரம். இக்கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கருடன் , ஆதிசேஷன் வழிபட்ட தலம். இத்தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று வீரதுர்க்கை அம்மன்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 87 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழபழையாறை- 612 703, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91 - 98945 69543 
    
 பொது தகவல்:
     
  வெளிப்பிரகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  திருமணத்தடை நீங்கவும், கலைகளில் சிறந்து விளங்கவும், உடற்பிணி நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம்.

 அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது.

கோயில்முன் மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்க்கை உருவமும் அழகுடையன.

பிற்காலச் சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகராய் சிறந்து விளங்கியது.

இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1) நல்லூர் 2)வலஞ்சுழி 3) சத்திமுற்றம் 4) பட்டீச்சரம் 5) ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷிணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

இங்குள்ள கைலாசநாதரை ராஜராஜசோழன் தினமும் வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த  கைலாச நாதரை வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.
 
     
  தல வரலாறு:
     
  முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்றுக் இத்தலத்தின் வழியே வரும்போது அசுரர்கள் இதைக்கண்டு கருடனுடன் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின.

கருடன் தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar