Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: மலையாள பகவதிஅம்மன்
  ஊர்: கணக்கன்பாளையம்
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சரஸ்வதி பூஜையும், கார்த்திகை தீப திருவிழாவும், மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. தை மாதம் பொங்கல் திருவிழாவும், அதனை முன்னிட்டு அம்பாள் திருவீதி உலாவும் நடக்கிறது. ஒவ்வொரு பங்குனி மாதம் முதல் வியாழன் அன்று கோயில் திருவிழா துவங்கப்படுகிறது. அன்றைய தினம் பூச்சாட்டுதலும், அதற்கு முன்பாக தீர்த்தக்குட உற்சவமும், பச்சை பூஜை விழாவும், வியாழன் அன்று காலை அம்மை அழைத்தலும், பத்து மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் (தீ மிதித்தல்) நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து அம்பாள் கோயிலில் இருந்து புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மஞ்சள் நீர் உற்வமும் நடப்பது வழக்கம்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் 
   
முகவரி:
   
  அருள்மிகு மலையாள பகவதிஅம்மன் திருக்கோயில், கோபிசெட்டிபாளையம், கணக்கன்பாளையம் - 638452, ஈரோடு மாவட்டம்.  
   
போன்:
   
  +91-4285-318 271, 94430 08679 
    
 பொது தகவல்:
     
 

1915ல் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 1922ல் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அடுத்து 1977ம் ஆண்டு தைமாதம் 22ம் தேதி இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தது.



 
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்கள் நோயினை போக்க இக்கோயிலில் தொடர்ந்து 12 நாட்கள் தங்கி நந்தா தீபம் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

எந்த நோயாக இருந்தாலும் இந்த அம்பாளை மனதில் நினைத்து கோயிலை சுற்றியுள்ள இலைதழைகளை பறித்து தன் உடம்பில் பூசிக்கொண்டால் அந்த நோய் வெப்பத்தை கண்ட பனிபோல நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
 
    
நேர்த்திக்கடன்:
    
  அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  ஈரோடு மாவட்டம் கணக்கன்பாளையத்தில் அருள்பாலிக்கும் மலையாள பகவதி அம்மன், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து, தீராத துன்பங்களை தீர்த்து வைக்கிறாள். பக்தர்களுக்கு வேண்டிய வரம் எல்லாம் கொடுத்து வருகிறாள் பகவதித்தாய். பக்தி பரவசத்தோடும், பயபக்தியோடும் கும்பிடுவோருக்கு பாசத்தோடு அருள்புரிந்து வருகிறாள்.

பூஜைகள்: காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி என தினமும் மூன்று முறை பூஜைகள் செய்யப்படுகின்றன.

மாதம்தோறும் அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அலங்காரம், அபிஷேக, ஆராதனைகளும், இரவில் கோயிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பெண்கள் 108 திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு பூஜித்து வருகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  கர்நாடக மாநிலத்தில் விளையும் மஞ்சளை வியாபாரத்திற்காக ஒரு வியாபாரி நூறு ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் மூடைகளை மாட்டு பொதியில் பாரமேற்றி மலைப்பாதை வழியாக ஓட்டி வந்தார். அப்போது சமநிலையான பாரம் இல்லாததால் மாடு தடுமாறி சென்றது. இதனால் அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஏதேனும் பாறாங்கற்களை ஏற்றலாம் என நினைத்து மலைக்காட்டிற்குள் சென்றார் அந்த வியாபாரி.

அங்கு ஒரு கல் மினுமினுப்புடன் தென்பட்டது. அதனை எடுத்து மாட்டு வண்டியின் பொதியினுள் வைக்க பாரம் சரியானது. பின்னர் வியாபாரி வண்டியை சிரமமில்லாமல் ஓட்டி வந்தார். கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் மலையடிவார பகுதிக்கு வந்ததும் மாட்டுவண்டி பொதியினுள் இருந்த மினுமினுப்பான கல் கீழே விழுந்துவிட்டது. ஆனால் வண்டியின் பாரத்தில் மாற்றம் எதுவும் தெரியாததால், வியாபாரி கல் கீழே விழுந்ததைக் கவனிக்கவில்லை. கல் கீழே விழுந்த இடத்தில் சிறிது நாட்களிலேயே அதனை சுற்றி புற்று வளர்ந்துவிட்டது. மழைக்காலத்தில் ஈசல்கள் புற்றில் தோன்றியது. அதனை சாப்பிடுவதற்காக மலையடிவாரத்தில் வசிக்கும் வளையவன் என்பவன், அந்த புற்றை மண்வெட்டியால் வெட்ட, புற்றிலிருந்து ரத்தம் வடிந்து வந்தது.

அதை பார்த்த வளையவன் திடுக்கிட்டு அங்குள்ளவர்களிடம் விவரித்தான். பின்னர் அங்குள்ளவர்கள் ஒன்று திரண்டு அங்கு வந்தனர். வளையவன் காட்டிய புற்றில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அங்கே வந்தவர்களில் ஒருவருக்கு அருள் வந்து, ""நான்தான் மலையாள பகவதி. இதே இடத்தில் வைத்து பூஜை செய்யுங்கள். எல்லோருக்கும் பாதுகாவலாக இருப்பேன்'' என சொல்லிவிட்டு அருள் நின்றுவிட்டது. உடனே ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி அங்கு பச்சை பந்தல் அமைத்து அந்த தாய்க்கு பூஜை செய்ய ஆரம்பித்தனர். சிறிது காலம் பச்சை பந்தல் அமைத்து பூஜை செய்யப்பட்டது.அதனையடுத்து 1915ல் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar