Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
வேலூர்
1. அருள்மிகு யோக நரசிம்மசுவாமி கோயில்,
சோளிங்கர்
அருள்மிகு யோக நரசிம்மசுவாமி கோயில்
மூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி )
அம்மன்/தாயார் : அமிர்தவள்ளி
இருப்பிடம் : வேலூர் - திருத்தணி வழியில் சோளிங்கர் இருக்கிறது. தவிர சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் சென்றடையலாம்.சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூர் நகர்களிலிருந்து பேருந்து வசதி நிறைய உண்டு
போன் : +91- 4172 263515
பிரார்த்தனை :

இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். ஆண்பெண் சேராமை(தாம்பத்ய பிரச்சினை) , குழந்தையின்மை, ...

சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம்.இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது ...
2. அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில்,
ஸ்ரீபுரம் திருமலைக்கோடி
அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில்
மூலவர் : லட்சுமிநாராயணி
இருப்பிடம் : வேலூரிலிருந்து தெற்கே ஒசூர் அணைக்கட்டு செல்லும் வழியில் 7 கி.மீ., தூரத்தில் ஸ்ரீபுரம் உள்ளது.
போன் : +91- 416 - 227 1855, 227 1202
பிரார்த்தனை : மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது ...
சிறப்பு : இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.இக்கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள், தங்கக்கோயில் என்று ...
3. அருள்மிகு பாலமுருகன் கோயில்,
ரத்தினகிரி
அருள்மிகு பாலமுருகன் கோயில்
மூலவர் : பாலமுருகன்
இருப்பிடம் : வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் 14 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.
போன் : +91- 4172 - 266 350, 266 330, 94436 25887.
பிரார்த்தனை : திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், ...
சிறப்பு : அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், "ஒப்பில்லாத மாமணி, வித்தகர்' எனச் சொல்லி பாடியிருக்கிறார். இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின்போது ...
4. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்,
வள்ளிமலை
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில்
மூலவர் : சுப்ரமணியர்
அம்மன்/தாயார் : வள்ளி
இருப்பிடம் : வேலூரில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் வள்ளிமலை இருக்கிறது. பொன்னை என்ற ஊருக்குச் செல்லும் பஸ்கள் இத்தலம் வழியே செல்கிறது. சோளிங்கர் வழியாக திருத்தணி செல்லும் பஸ்களும் இவ்வூர் வழியே செல்கிறது.
போன் : +91- 4172 - 252 295.
பிரார்த்தனை : திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு : முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை ...
5. அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில்,
வேலூர்
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில்
மூலவர் : ஜலகண்டேஸ்வரர்
அம்மன்/தாயார் : அகிலாண்டேஸ்வரி
இருப்பிடம் : வேலூர் நகரின் மத்தியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91 98947 45768, 98946 82111, + 416 222 3412, 222 1229
பிரார்த்தனை :

ஆயுள் விருத்தி பெற, விபத்து பயம் நீங்க, தடைபட்ட திருமணங்கள் நடக்க, சகல திருஷ்டிகளும் விலக இங்கு ...

சிறப்பு : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் ...
6. அருள்மிகு செல்வ விநாயகர் கோயில்,
சேண்பாக்கம்
அருள்மிகு செல்வ விநாயகர் கோயில்
மூலவர் : செல்வ விநாயகர்
இருப்பிடம் : வேலூர் நகரிலிருந்து (3 கி.மீ.) பெங்களூரு செல்லும் வழியில் சேண்பாக்கம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வேலூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து 3ம் நம்பர் பஸ்சும், ஆட்டோ வசதியும் உள்ளது.
போன் : +91-416 - 229 0182, 94434 19001.
பிரார்த்தனை : திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள ...
சிறப்பு : இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக ...
7. அருள்மிகு வில்வநாதேஸ்வரர் கோயில்,
திருவல்லம்
அருள்மிகு வில்வநாதேஸ்வரர் கோயில்
மூலவர் : வில்வநாதேஸ்வரர்
அம்மன்/தாயார் : வல்லாம்பிகை
இருப்பிடம் : வேலூரிலிருந்து, ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ., தொலைவில் திருவல்லம் அமைந்துள்ளது.
போன் : 91- 416-223 6088.
பிரார்த்தனை :

சிவனின் பெயர் வில்வநாதேஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.


இதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோல் சம்பந்தப்பட்ட ...

சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பியுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 242 வது ...
8. அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில்,
திருமால்பூர்
அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில்
மூலவர் : மணிகண்டீஸ்வரர்
அம்மன்/தாயார் : அஞ்சனாட்சி
இருப்பிடம் : காஞ்சிபுரத்திலிருந்து (22 கி.மீ) பனப்பாக்கம் வழியாக ஆற்காடு செல்லும் பஸ்சில் கோயிலுக்கு செல்லலாம். சென்னையிலிருந்து வருபவர்கள் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் வரும் வழியில் திருமால்பூரில் இறங்க வேண்டும்.
போன் : +91 4177 248 220, 93454 49339
பிரார்த்தனை :

பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குளில் வெற்றி பெறலாம் என்பது ...

சிறப்பு : பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) ...
9. அருள்மிகு ஜலநாதீஸ்வரர் கோயில்,
தக்கோலம்
அருள்மிகு ஜலநாதீஸ்வரர் கோயில்
மூலவர் : ஜலநாதீஸ்வரர்
அம்மன்/தாயார் : கிரிராஜ கன்னிகாம்பாள்
இருப்பிடம் : வேலூரில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் அவ்வப்போது உண்டு. அரக்கோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் கூட்ரோட்டில் இறங்கி 4 கி.மீ. தூரம் தனியார் பஸ் அல்லது ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம். பஸ் வசதி: சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து தடம் எண்456, காஞ்சிபுரத்திலிருந்து 49 பஸ் உள்ளது. வேலூரிலிருந்தும் தக்கோலத்திற்கு நேரடி பஸ் உள்ளது.
போன் : +91- 4177-246 427.
பிரார்த்தனை : இத்தலத்தில் காமதேனு வழிபட்டுள்ளாள். எனவே நாமும் இங்கு வழிபாடு செய்தால் நூறு மடங்கு பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது.

விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்படுகிறது. ...
சிறப்பு : இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு நூறு மடங்காக பெருகும் என புராணம் கூறுகிறது. இத்தலத்தில் அம்மன் நின்ற நிலையில் வடக்கு ...
10. அருள்மிகு தன்வந்திரி பகவான் கோயில்,
கீழ்ப்புதுப்பேட்டை
அருள்மிகு தன்வந்திரி பகவான் கோயில்
மூலவர் : தன்வந்திரி
இருப்பிடம் : சென்னையில் இருந்து வேலூர், பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் இருக்கிறது வாலாஜாபேட்டை. அங்கிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் தன்வந்திரி பகவான் ஆரோக்கிய பீடம் அமைந்துள்ளது.
போன் : +91- 4172 230033, 94433 30203
பிரார்த்தனை : பக்தர்கள் உடல் நலம் சம்பந்தப்பட்ட நோய்கள், திருமணத் தடை, குடும்பப் பிரச்சனை, வழக்குகள் போன்றவற்றுக்கு இங்கு பிரார்த்தனைகள் ...
சிறப்பு : தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே ...
 
மேலும் வேலூர் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar